Published : 01 Aug 2014 05:00 PM
Last Updated : 01 Aug 2014 05:00 PM

அவமதிப்பு கட்டுரை: மோடி, ஜெயலலிதாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது இலங்கை அரசு

இலங்கை அரசின் இணைய தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் கட்டுரை வெளியான தற்காக அந்த நாட்டு அரசு பகிரங்க மாக மன்னிப்பு கோரியுள்ளது.இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடமும் முதல்வர் ஜெயலலிதாவிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர் பிரச்சினை கடிதம்

தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம் குறித்து இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில் மிகவும் அநாகரிமாக விமர்சித்து வெள்ளிக்கிழமை ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.

‘நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் கடிதங்களில் அர்த்தம் உள்ளதா? ’ என்று அந்தக் கட்டுரைக்கு விஷமத்தனமான தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஷெனாலி டி. வடுகே என்பவர் எழுதியிருந்த அந்தக் கட்டுரையின் சாராம்சம் வருமாறு:

இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு கவுன்சிலில் கலந்துகொள்ள வந்த சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட இந்திய குழுவினர், இந்தியா - இலங்கை உறவில் தமிழகத்தின் குறுக்கீடு இருக்காது என தெரிவித்துள்ளனர். தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு அதிபர் ராஜபக்சவுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தெரிவித்த கருத்துகளை வைத்து பார்க்கும்போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறுகின்றனர் என்பதை ஜெயலலிதா மறுக்க முடியாது என்பது உறுதியாகிறது.

எனவே இலங்கையை குற்றம்சாட்டி மோடிக்கு கடிதம் எழுதும் தந்திரத்தை ஜெயலலிதா நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இந்திய கடலில் மீன்வளம் குறைந்துவிட்டால் அண்டை நாட்டுக் கடலில் அத்துமீறி மீன்பிடிக்கலாம் என்பது அர்த்தமில்லை.

மாறாக, ஜெயலலிதா தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கட்சி பாகுபாடின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இலங்கை அரசை கடுமையாகக் கண்டித்தனர். அதிமுக எம்.பி.க்கள் இப்பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பினர்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை எழுதிய கடிதத்தில், இலங்கை தூதரக அதிகாரியை நேரில் அழைத்து மத்திய அரசின் அதிருப் தியை அழுத்தமாக தெரிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த கட்டுரை விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தரப்பில் இலங்கை அரசிடம் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

கட்டுரை நீக்கம்

இந்நிலையில் சர்ச்சைக்குரிய கட்டுரை இலங்கை அரசின் இணையதளத்தில் இருந்து சில மணி நேரங்களில் நீக்கப் பட்டது. அடுத்த சில நிமிடங் களில் இலங்கை அரசின் இணையதளத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் படத்துடன் பகிரங்க மன்னிப்பும் கோரப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்துடன் ஒரு கட்டுரை எங்கள் இணையதளத்தில் இடம் பெற்றது. இந்தக் கட்டுரை முறையான அனுமதி இன்றி பரிசீலனைக்கு உட்படுத்தாமல் வெளியிடப்பட்டுவிட்டது.

கட்டுரையின் கருத்துகள் இலங்கை அரசின் நிலைப்பாடோ, பாதுகாப்புத் துறையின் நிலைப் பாடோ இல்லை. அரசு இணைய தளத்தில் இருந்து உடனடியாக அக்கட்டுரை நீக்கப்பட்டுவிட்டது.

இதுதொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிட மும் தமிழக முதல்வர் ஜெயலலி தாவிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருகிறோம். இவ்வாறு இலங்கை அரசின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளரின் கருத்து.. இலங்கை அரசு கருத்தல்ல!

இதுகுறித்து இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் ரூவன் வணிகசூரியா ‘தி இந்து’விடம் கூறியதாவது:

அரசு இணையதள செய்திப் பிரிவு அதிகாரியின் தவறால் இந்தக் கட்டுரை இணையதளத்தில் இடம்பெற்றுவிட்டது. இந்த தவறுக்கு நாங்கள் முழு பொறுப் பேற்றுக் கொள்கிறோம். அதற்காக மிகவும் வருத்தப்படுகிறோம்.

கட்டுரையில் வெளியிடப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடியின் படங்கள் அநாகரிக மானது. இணையதளத்தில் வெளி யான கட்டுரை எழுத்தாளர் ஷெனாலி டி. வடுகேவின் தனிப் பட்ட கருத்து.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x