Published : 27 May 2015 07:54 AM
Last Updated : 27 May 2015 07:54 AM

அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு: தமிழகத்தில் ரூ.6,770 கோடியில் புதிய ரயில் திட்டங்கள் - தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்

தமிழகத்தில் ரூ.6,770 கோடி மதிப்பிலான புதிய ரயில் திட்டங்கள் குறித்த அறிக்கையை மாநில அரசிடம் அளித்துள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அசோக் கே.அகர்வால் தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

ரயில் பயணிகளுக்கு உதவு வதற்காக இந்திய ரயில்வே சார்பில் நாடு முழுவதும் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. ஜூன் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் அளிப்பது, வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை அளிப்பது உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத் தப்படும்.

பெண்களுக்கான சிறப்பு மின் ரயில்களில் ‘சக்தி படை’ என்ற பெயரில் ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் காவலர் கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். மற்ற ரயில்களில் இரவு 8 முதல் காலை 6 மணி வரை பெண்கள் பயணம் செய்யும் பெட்டிகளில் பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

செங்கல்பட்டு - கருங்குழி இடையே 20 கி.மீ. மற்றும் விழுப் புரம் - திண்டுக்கல் வழித்தடத்தில் உள்ள கல்லக்குடி பழங்காநத்தம் - அரியலூர் இடையே 26 கி.மீ. தொலைவுக்கு இரட்டைப் பாதை அமைக்கும் பணி நிறைவடைந் துள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வுக்குப் பிறகு இவ் வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப் படும். இதேபோல பழநி - பொள் ளாச்சி மற்றும் பொள்ளாச்சி - பாலக்காடு டவுன் இடையே அகலப் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் இவ்வழித்தடத்திலும் ரயில்கள் இயக்கப்படும். விருதுநகர் - திருநெல்வேலி இடையே 142 கி.மீ., கோவை - மேட்டுப்பாளையம் இடையே 33 கி.மீ. வரை மின்மயமாக் கும் பணி நிறைவடைந்துள்ளது. சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் - பேசின்பிரிட்ஜ் இடையே விரைவாக ரயில்களை இயக்குவதற்கு வசதியாக இரண்டு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணி நடப்பு நிதியாண்டுக்குள் முடிக்கப்படும். சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தை மூன்றாவது முனையமாக மாற்றும் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் விவாதிப்பதற்காக தமிழகத்தில் புதிதாக தொடங் கப்பட உள்ள ரயில் திட்டங்கள் குறித்த அறிக்கையை தமிழக அரசிடம் அளித்துள்ளோம்.

மதுரை - கன்னியாகுமரி இடையே 250 கி.மீ. தொலைவுக்கு ரூ.2,600 கோடி செலவில் இரட்டைப் பாதை அமைத்தல், ஆவடி ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி இடையே 60 கி.மீ. தொலைவுக்கு ரூ.720 கோடியிலும் சென்னை பெருங்குடி மாமல்லபுரம் புதுச்சேரி - கடலூர் இடையேயான 180 கி.மீ. தொலைவுக்கு ரூ.1,950 கோடியிலும் மதுரை அருப்புக் கோட்டை மேல்மருதூர் - தூத்துக் குடி இடையே 144 கி.மீ. தொலை வுக்கு ரூ.1,500 கோடியிலும் புதிய பாதைகள் அமைத்தல் ஆகிய வையே ரயில்வே துறை பரிந் துரைத்துள்ள திட்டங்கள் ஆகும்.

முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதற்கான நிதி ஆதாரங்கள் கிடைக்கும்பட்சத்தில் இத்திட்டங் களுக்கான பணிகள் தொடங்கப் படும். இவ்வாறு அசோக் அகர்வால் கூறினார்.

திருப்பதி, புதுச்சேரிக்கு ஏ.சி. மின்சார ரயில்

சென்னையில் இருந்து திருப்பதி, புதுச்சேரிக்கு ஏ.சி. வசதியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில்களை முதல்வர் ஜெயலலிதா விரைவில் தொடங்கி வைக்கவுள்ளார். இதுகுறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அசோக் அகர்வால் கூறும்போது, ‘‘சென்னை திருப்பதி மற்றும் சென்னை - புதுச்சேரி இடையே முதல்முறையாக ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா விரைவில் தொடங்கி வைப்பார்’’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x