Published : 29 Apr 2016 02:49 PM
Last Updated : 29 Apr 2016 02:49 PM

அதிமுகவின் மதுவிலக்கு அறிவிப்பு மக்களை திசை திருப்பும் செயல்: முரளிதரராவ் குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டம் வடலூர், குறிஞ்சிப்பாடி, கடலூர் ஆகிய இடங்களில் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் முரளிதரராவ் பின்னர் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்தியில் பாரதிய ஜனதா பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் பல்வேறு நல்ல திட்டங்களை தமிழகத்துக்கு வழங்கியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை தமிழக அரசு இன்னமும் வழங்காததால் அது கட்டப்படாமல் உள்ளது. முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழக மீனவர்கள் 600-க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மோடி அரசு பதவி ஏற்ற பிறகு இது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் 23 சதவீதமாவும், சத்தீஸ்கரில் 8 சதவீதமாகவும் இருக்கும் விவசாய வளர்ச்சி தமிழகத்தில் வெறும் 2 சதவீதமாக உள்ளது. மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வருவோம் என அதிமுக கூறுவது மக்களை திசை திருப்பும் செயல்.

பிரதமர் மோடி கூறியது போல 2022 ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்கப்படும் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும். அடுத்த மூன்றாண்டுகளில் அனைவருக்கும் காஸ் இணைப்பு வழங்கப்படும். ஊழல் முழுமையாக ஒழிக்கப்படும் என்று தெரிவித்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x