Published : 03 Oct 2017 10:44 AM
Last Updated : 03 Oct 2017 10:44 AM

லாரி மீது கார் மோதியதில் தாய், மகன் உள்ளிட்ட 4 பேர் பலி

தருமபுரி அருகே லாரி மீது கார் மோதியதில் சேலத்தைச் சேர்ந்த தாய், மகன் உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக பலியாயினர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பேக்கரி கடை உரிமையாளர் அசோகன். இவரது மனைவி சித்ரா(50). இவர்கள், உறவினர்கள் உள்ளிட்ட 12 பேருடன் தீபாவளி பண்டிகைக்கு துணிகள் எடுக்க பெங்களூர் சென்றுவிட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார்(54) என்பவர் ஓட்டினார்.

தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 12.45 மணியளவில் நல்லம்பள்ளி அடுத்த புறவடை மேம்பாலம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சிமென்ட் பாரம் ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறம் மோதியது. இதில், காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. இதில், சித்ரா, அர்ச்சுனன், கண்ணன்(40), இவரது மகள் தன்யா ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலியான கண்ணன் பழநியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார்..

தகவலறிந்து அங்கு சென்ற அதியமான்கோட்டை போலீஸார் படுகாயமடைந்த 8 பேரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னா், அவர்கள் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

4 பேர் காயம்

விபத்து நிகழ்ந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவ்வழியே வந்த டிரைலர் லாரியை நிறுத்தினர். அப்போது, ஓசூரில் இருந்து தரங்கப்பாடி நோக்கி சென்ற சுற்றுலாப் பேருந்து, லாரி மீது மோதியது. இதில் பேருந்து ஓட்டுநர் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x