Published : 27 Dec 2015 12:13 PM
Last Updated : 27 Dec 2015 12:13 PM

நீர்நிலைகளை காக்க ஒன்று சேர்வோம்: இணைவோம்.. இணைப்போம் - நடிகர் சூர்யாவுடன் நேர்காணல்

மழை வெள்ள பாதிப்பில் உள்ள மக்களுக்கு உதவ, நடத் தப்படும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியின் முன்னோட்டப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பாடலை மீண்டும் மீண்டும் ஓடவிட்டு கூர்ந்து கவனிக்கிறார் அகரம் ஃபவுண்டேஷன் நிறுவனர் சூர்யா. ‘தி இந்து’ குழுமம், புதிய தலைமுறை குழுமம், அகரம் ஃபவுண்டேஷன் இணைந்து நடத்துகிற ‘சுற்றுச்சூழல், நீர்நிலை பாதுகாப்பு’ தொடர்பான ‘இணை வோம்... இணைப்போம்” கருத்தரங்க வேலைகளில் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார் சூர்யா.

‘மழை எல்லாரையும் ஒண்ணு சேர்த்துடுச்சு. வாழ்க்கைக்குத் தேவையான எல்லாத்தையும் மறந்துட்டு வேகமா ஓடிக்கிட்டிருந்தோம். நம்மளை நிறுத்தி யோசிக்க வெச் சிருக்கு மழை. கஷ்டம் வரும்போது தான் நண்பர்கள் யாருன்னு தெரி யும்னு சொல்லுவாங்க. மழை நேரத் துல, கண்ணுல படுற எல்லாருமே நண்பர்களா மாறிப்போன அதி சயத்தை கொடுத்துருக்கு மழை. ஒற்றுமையின் பலம் என்னன்னு புரிய வெச்சிருக்கு மழை.

இந்தக் கருத்தரங்கத்தோட நோக்கம் என்ன?

எல்லா பக்கமும் தண்ணிய ஓடவிட்டு சென்னைய ஸ்தம்பிக்க வெச்சது மழை. மக்கள் இன்னும் பாதிப்புல இருந்து வெளியிலே வரலை. ஆனா, அதுக்குள்ள கூவம் அழுக்காக ஆரம்பிச்சிடுச்சு. அடையாறு கரையோரம் குப்பை கள் குவியுது. நீர் நிலைகளில் தண்ணீர் குறைய ஆரம்பிச்சிடுச்சு. இன்னும் மூணு மாசத்துல, ‘தண்ணீர் பற்றாக்குறை’னு செய்தி படிக்க ஆரம்பிச்சிடுவோம். பிரச்சனை வந்ததுக்கு அப்புறம் ஒண்ணு சேர்றதைவிட, பிரச்சனை வராம இருக்க எல்லாரும் ஒண்ணு சேர்ந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர், திரு என். ராம் மற்றும் புதியதலைமுறை குழுமத்தின் தலைவர் திரு. சத்ய நாராயணனை நேர்ல சந்திச்சுப் பேசினேன். எல்லா ரும் கைக்கோர்த்தா மாற்றம் கொண்டு வரமுடியும்னு நம் பிக்கை வந்துச்சு. இந்தக் கருத் தரங்கம் தொடக்கம்தான். வேலை கள் அதுக்கப்புறம்தான் ஆரம்பிக் கிறோம். நீர்நிலைகளைக் காக்க எல்லாரையும் ஒண்ணு சேர்க்கிறது தான் எங்களோட முதல் நோக்கம்.

'எப்படி ஒண்ணு சேர்க்க போறீங்க?'

நம்முடைய குழந்தைகளுக்கு நல்ல காத்து, நல்ல தண்ணீர், ஆரோக்கியமான சுற்றுச்சூழல் கிடைக்காதோங்கிற பயம் வந்து டுச்சு. யாரோ வெட்டிய ஏரியில் தாகம் தீர்க்கிறோம். யாரோ நட்ட மரத்தின் நிழலில் இளைப்பாற ஒதுங்குறோம். யாரோ போட்ட பாதையில் நடக்கிறோம். திரும்ப நாம் என்ன செஞ்சிருக்கோம்னு பார்த்தா, ஒண்ணுமே பண்ணலைங் கிறதுதான் உண்மை. என் வீட்டுக் குள்ள வந்த தண்ணிதான் இதை எனக்குப் புரியவெச்சது. எந்தப் பொறுப்பும் இல்லாம ஆத்துக்குள்ள நாம தூங்கி எறிஞ்ச குப்பைகள் திரும்ப நம்மகிட்டதான் வந்துச்சு.

அத்தனைப் பேரும் சுற்றுச்சூழல் மேம்பட அக்கறையோடு வேலை செய்தால், சமூகத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும். அதோட முதல் படிதான் ‘சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதுகாப்பு’ பற்றிய இரண்டு நாள் கருத்தங்கம்.

யாரெல்லாம் இந்த முயற்சியில் பங்கெடுக்கப் போறாங்க?

’யாதும் ஊரே - இணைவோம்... இணைப்போம்’னு இந்தத் திட்டத்துக்குப் பேர் வெச்சிருக்கோம். ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்கணும்னு நினைக்கிற எல்லாருமே ஒண்ணு சேரலாம். முதல் கட்டமா, நிவா ரண பணிகளில் ஈடுபட்ட இளைஞர் சக்தியை ஒண்ணா சேர்க்கிறோம். தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப் பில், நீர் மேலாண்மையில் அக்கறை யுள்ள, அறிஞர்கள், ஆராய்ச்சி யாளர்கள், செயல் வீரர்கள் எல்லா ரையும் ஒண்ணா சேர்க்கிறோம். சுற்றுப்புறச் சூழல் தொடர்பாக இனி செய்ய வேண்டியது பற்றி ஆலோசிக்க இருக்கிறோம். இரண்டுநாள் முடிவில், ஒரு செயல் திட்டத்தை வகுத்திருப்போம்.

அரசுடன் இணைந்து எப்படி செயல்படப்போறீங்க?

ஆந்திராவில், ஒரு கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்திற்கும், அரசு செலவில் கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் முயன்றும் மக்களை அதைப் பயன்படுத்த பழக்க முடியவில்லை. அரசுடன் மக்களும் இணைந்து ஒத்துழைத்தால்தான் நிரந்தர மாற்றங்கள் கிடைக்கும். அரசு இல்லாமல் எதையும் செய்ய முடியாது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ‘அரசு - மக்கள்’ இரண்டு தரப்பையும் இணைக்கிற பாலமாக ‘யாதும் ஊரே’ திட்டம் நிச்சயம் இருக்கும்.

கருத்தரங்கம் எங்கே, எப்போது நடக்கிறது?

சென்னையில், செயின்ட்பீட்ஸ் நூற்றாண்டு அரங்கத்தில், வரும் ஜனவரி 2, 3 தேதிகளில் நடக்குது. மழை நிவாரண பணிகளில் ஈடு பட்டவர்கள் தங்கள் விருப்பத்தை, ‘yadhum.in' என்ற இணையத்தில் பதிவு செய்துகொண்டால் போதும். முறையான அழைப்பு அவங் களுக்கு வரும். அனுமதிக்கப் பட்டவங்க மட்டுமே கருத்தரங்கில் கலந்துக்க முடியும். அதனால், விருப்பம் இருக்கிறவங்க சீக்கிரமே பதிவு செய்யுங்க. ‘உயர் நீதிமன்ற நீதியரசர்கள், இந்தியாவின் தண் ணீர் மனிதர் ‘ராஜேந்திர சிங்’ சுற்றுச்சூழல் அறிஞர்கள், முக்கிய மான வி.ஐ.பிகள் எல்லாரும் பங்கெடுக்கிற நிகழ்வு இது.

இந்த இரண்டு நாள் கருத்தரங்கம், சமூகத்தில் மட்டுமில்ல, நமக்குள்ளேயும் மாற்றம் விதைக்கபோகிற நாளாக இருக்கும்.” என்கிறார்.

சமூக மாற்றத்தில் அக்கறை யுள்ள எல்லாரையும் வரவேற்கி றோம். இணைவோம்... இணைப் போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x