Published : 31 May 2018 08:02 PM
Last Updated : 31 May 2018 08:02 PM

விமான நிலைய பேட்டி: வருத்தம் தெரிவித்தார் ரஜினி

மிரட்டும் தொனியில் பத்திரிகையாளரிடம் பேசியதாக எழுந்த புகாரில் பலத்த கண்டனம் எழுந்ததை அடுத்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து ரஜினி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31 அன்று தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் இதுவரை கட்சியின் பெயர், கொடி, சின்னம் எதையும் வெளியிடவில்லை. ஒவ்வொரு தடவையும் அரசியல் அழுத்தம் வரும்போது மட்டும் கருத்துக்களை வெளியிடுவதும் பின்னர் மாற்றிக்கொள்வதும் ரஜினியை சர்ச்சையில் சிக்க வைத்தது.

ஐபிஎல் போராட்டத்தில் ஆரம்பத்தில் ஆதரவாக கருத்து தெரிவித்தவர், பின்னர் பின் வாங்கி போராட்டக்காரர்களை கண்டித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்த ரஜினி, அனைவரும் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த நேரத்தில் தான் போகாமல் இருந்தால் அது சரியல்ல என்ற எண்ணத்தில் தூத்துக்குடி சென்றார்.

அங்கும் போராட்டம் குறித்த ரஜினியின் விமர்சனமும், அரசுக்கு ஆதரவாக பேசியது, இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பியதும் பெரிய ட்ரெண்டானது. இந்நிலையில் ரஜினி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை ஏய் என ஏக வசனத்தில் பேசினார். இது பெரிய பிரச்சினையை தோற்றுவித்தது.

ரஜினியின் ஏக வசன பேச்சு குறித்து பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் இது குறித்து ரஜினிகாந்த் தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ள ரஜினி பதிவிட்டுள்ளதாவது:

“விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில், ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x