Published : 27 May 2018 04:18 PM
Last Updated : 27 May 2018 04:18 PM

இலங்கை ராணுவத் துப்பாக்கிக்குத் தப்பித்தவர் தூத்துக்குடி தோட்டாவுக்குப் பலியான சோகம்

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர், இதில் ஒருவர் இலங்கையிலிருந்து இங்கு வந்து வசித்து வந்த கந்தையா என்ற நபர் என்று தெரியவந்துள்ளது.

இவர்கள் குடும்பம் இலங்கையில் இனக்கலவரம் உச்சத்தில் இருந்த காலக்கட்டமான 1981-ம் ஆண்டே மற்ற தமிழர்களுடன் இந்தியா வந்துள்ளார், இவருக்கு இப்போதைய வயது 58.

இலங்கையிலிருந்து வந்த இவர் தூத்துக்குடி சிலோன் காலணியில் மனைவி செல்வமணி, மகன் ஜெகதீஷ் ஆகியோருடன் வசித்து வந்தார். கட்டுமானப் பணியில் வேலை செய்து வந்த இவர் ஸ்டெர்லைட் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் 100வது நாள் போராட்டத்தில் பங்கு பெற்று கலெக்டர் அலுவலகம் ஊர்வலம் செல்லும்போது துப்பாக்கித் தோட்டாவுக்கு இரையானார். இவர் மரணமடைந்த வீடியோ தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி பரபரப்பை உருவாக்கியது.

இலங்கையில் ராணுவத்தின் துப்பாக்கியிலிருந்து தப்பி இங்கு வந்து தூத்துக்குடியில் அவர் பலியான விவரத்தை அவரது மனைவிதான் கூறினார்.

சிலோன் காலனியில் கந்தையாவின் உருவப்படம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மகன் ஜெகதீசனுக்கு தந்தை மரணமடைந்தது தெரியவில்லை, காரணம் அவர் மனவளர்ச்சி குன்றியவர். பேசவும் முடியாது.

கந்தையாவின் மறைவினால் தன் மகனின் நிலையை எண்ணியும் பிரிவைத் தாங்காமலும் மனைவி கடும் இன்னலில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x