Published : 20 May 2018 08:42 AM
Last Updated : 20 May 2018 08:42 AM

சென்னை - சேலம் இடையே பசுமை 8 வழிச் சாலை திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநில செயற் குழு உறுப்பினர் கே.தங்கவேல் தலைமை வகித்தார். கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோர் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண் டனர்.

தீர்மானங்கள்

சென்னை முதல் சேலம் வரை பசுமை 8 வழிச்சாலையை ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிணறுகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டு, ஏரிகள், கண்மாய்களை ஆக்கிரமித்து இந்த சாலை அமைக்கப்படுகிறது. விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே சேலத்தில் இருந்து விழுப்புரம் வழியாகவும் கிருஷ்ணகிரி, வேலூர் வழியாகவும் சென்னைக்கும் நான்கு வழிச்சாலை உள்ளது. இவ்விரு சாலைகளை மேம்படுத்தினாலே போதும். எனவே விவசாயத்தை பாதிக்கும் பசுமை சாலைத் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்திட வேண்டும்.

நீட் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கு முழு மதிப்பெண்களை மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும். இதற்காக மத்திய அரசை நிர்பந்திக்கும் வகையில் தமிழக தொழில் முனைவோர் ஒத்துழையாமை இயக்கம் மேற்கொள்ளவுள்ளனர். அதற்கு வணிகர்கள், சிறுகுறு தொழில் நிறுவனங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x