Published : 19 May 2018 03:24 PM
Last Updated : 19 May 2018 03:24 PM

வார இறுதி நாட்களில் மருத்துவமனை மேலாண்மை சான்றிதழ் படிப்பு: விண்ணப்பிக்க அழைப்பு

டுவின்டெக் அகாடமி மற்றும் வணிக மேலாண்மை தீர்வு மையம் இணைந்து நடத்தும் மருத்துவமனை மேலாண்மை சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை டுவின்டெக் அகாடமி வணிக மேலாண்மை தீர்வு மையம் மேலாண்மை சான்றிதழ் படிப்பினை தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்தப் படிப்பு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவம் சார்ந்த நிறுவனங்களில் நிர்வாகம் மற்றும் மேலாண்மைத் துறைகளில் பணியாற்றும் இள நிலை மற்றும் மத்திய நிலை ஊழியர்களின் வசதியை கருத்திற்கொண்டு இரண்டு நாட்கள் அதாவது ஜூன் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் சிறப்பு வகுப்புகளாக வழங்குகிறது.

கம்யூனிகேஷன் திறன், சுகாதார சேவையில் மனித வள மேலாண்மை, மருத்துவமனைகளுக்கான தர அங்கீகார முறைகள், தொடர் விநியோக மேலாண்மை எனப்படும் சப்ளை செயின் மேனேஜ்மென்ட், சுகாதாரத்துறையில் தகவல் தொடர்பு வசதிகள், சுகாதாரப் பாதுகாப்பு சட்டங்கள், ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் மற்றும் க்ளெய்ம் மேனேஜ்மென்ட், முழுத்தர நிர்வாகம், பயிற்சி மற்றும் வளர்ச்சி தேவைகள், நிதி நிர்வாகம் மற்றும் மருத்துவமனை விஜயம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக இந்தப் படிப்பு அமைந்துள்ளது. நிச்சயமாக அவர்கள் நன்கு தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும். மத்திய நிலை மற்றும் மூத்த மேலாளர்கள் நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் கருத்துககள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொள்ளும் வண்ணம் இப்படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படிப்பின் மூலம் பயிற்சி பெறும் மாணவர்கள் தங்களது தலைமைப் பண்புகளையும், குழு மனப்பாங்கினையும் ஏற்படுத்தி மேம்படுத்தவும் தயார்படுத்துகிறது.

இந்த படிப்பின் மறுமொரு முக்கிய நோக்கம், மருத்துவமனைகளின் வளமான நிகழ்கால அனுபவங்களிடமிருந்து பெறப்பட்ட மற்றும் சமீபத்திய மேம்படுத்தப்பட்ட மேலாண்மை உத்திகளை அந்தந்தத் துறைகளின் வல்லுநர்களின் மேற்பார்வையில், தனிநபர்களைச் சிறந்த திறமை மிக்க சிறப்பாகச் செயல்படக்கூடிய மேற்பார்வை மற்றும் நிர்வாக அதிகாரிகளை உருவாக்குவதே ஆகும்.

பயிற்சிக்கு பதிவுப் படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க கடைசி நாள் :20.05.2018

பயிற்சி நடைபெறும் இடம்: இந்திய பயிற்சி மற்றும் வளர்ச்சி கழகம் (ஐஎஸ்டிடி), நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை

ஆன்லைன் பதிவு மற்றும் விண்ணப்பிக்க : www.chennaitwintech.com

மேலும் விவரங்களுக்கு; அ. மகாலிங்கம், டுவின்டெக் அகாடமி, தொலைபேசி எண்: (0) 97104 85295 இ-மெயில்: mahali@mahali.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x