Published : 18 May 2018 07:23 AM
Last Updated : 18 May 2018 07:23 AM

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் பதிவு கட்டணத்தை இன்று முதல் வரைவோலையாகவும் செலுத்தலாம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு கட்டணத்தை இன்று (வெள்ளிக் கிழமை) முதல் வரைவோலையாகவும் (டி.டி.) செலுத்தலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு கட்டணம் நெட்பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக மட்டுமின்றி வரைவோலையாகவும் பெற்றுக்கொள்ளப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தால் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை உதவி மையங்களில் மட்டும் 18-ம் தேதி (இன்று வெள்ளிக்கிழமை) முதல் வரைவோலைகள் ஏற்றுக்கொள்ளப்படும். வரைவோலையானது ‘The Secretary, Tamil Nadu Engineering Admissions, Anna University’ என்ற பெயரில் சென்னையில் செலுத்தக் கூடியதாக ஒரே தொகையாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும். பதிவுக்கட்டணம் விவரம்:

பொதுப்பிரிவினர் - ரூ.500

எஸ்சி, எஸ்சி (அருந்ததி யினர்), எஸ்டி - ரூ.250

சிறப்பு ஒதுக்கீடுப் பிரிவு (ஒவ்வொரு பிரிவுக்கும்) - ரூ.100

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் பதிவு மே 30-ம் தேதி முடிவடைகிறது. இதுவரை 74 ஆயிரம் பேர் ஆன்லைன் பதிவை நிறைவு செய்திருப்பதாகவும் ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x