Published : 23 Feb 2018 09:36 AM
Last Updated : 23 Feb 2018 09:36 AM

கமல் கட்சியின் லோகோவை கலாய்த்த எச்.ராஜா

கமல்ஹாசனின் கட்சிக் கொடியை பாஜக தேசியப் பொதுச் செயலாளர் எச்.ராஜா ட்விட்டரில் கலாய்த்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 21-ம் தேதி மதுரையில் தனது கட்சியின் பெயரை அறிவித்ததோடு கட்சிக் கொடியையும் ஏற்றிவைத்தார். 'மக்கள் நீதி மய்யம்' என அவர் தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளார். இந்நிலையில், அவரது கட்சிக் கொடியில் 6 கரங்கள் இணைந்திருப்பதுபோல் இருக்கிறது. கமலின் கட்சிக் கொடியை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்துவந்த நிலையில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜாவும் தனது பங்குக்கு ட்விட்டரில் கமலின் கட்சிக் கொடியை கலாய்த்துள்ளார்.

கமல் கட்சிக் கொடி குறித்து, "ஏக் பாரத் ஸ்ரேஷ்ட் பாரத்தின் லோகோவை anti clockwise ல் போட்டால் மநீம" என ட்வீட் செய்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x