Published : 07 Feb 2018 09:24 PM
Last Updated : 07 Feb 2018 09:24 PM

வங்கிகளில் பணமெடுப்பவர்கள் கவனத்தை திசை திருப்பி பணம் பறிப்பு: 3 பேர் கைது ரூ.8 லட்சம் பறிமுதல்

வங்கிகளில் பணம் எடுத்துவரும் வாடிக்கையாளர்கள் கவனத்தை திசைத்திருப்பி பணத்தை திருடும் கும்பலை சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்து ரூ.8 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை வளசரவாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு நபர் வங்கியிலிருந்து ரூ.4 லட்சம் பணத்தை எடுத்து வரும்போது அவரது குழந்தை சாக்லேட் கேட்பதை பயன்படுத்தி ஒரு கும்பல் அவரது கவனத்தை திசைத்திருப்பி அவரது வாகனத்திலிருந்து ரூ.4 லட்சத்தை திருடி சென்றது.

கோட்டூர் புரத்தில் ஒரு நபர் மீது அரிப்பு ஏற்படுத்தும் செடியின் பவுடரை மேலே தூவி அவர் அரிப்பு தாங்காமல் தண்ணீரை தேடும்போது அவருக்கு உதவுவது போல் ஒரு கும்பல் அவரிடமிருந்து ரூ.2.5 லட்சம் ரொக்கப்பணத்தை திருடிச்சென்றது.

மணலி புது நகரில் ஒரு பெண்ணிடம் அவரது கவனத்தை திசைத்திருப்பி ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிச்சென்றது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரை அடுத்து வளசரவாக்கம், கோட்டூர்புரம் போலீஸார் சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அதில் கிடைத்த காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.

மூன்று பேர் புகைப்படம் கிடைத்தது. அந்த புகைப்படங்களை அனைத்து வங்கி கிளைகளுக்கும் வளசவாக்கம் போலீஸார் அளித்திருந்தனர். இதில் மணலி புதுநகர் கிளையில் அவர்கள் மீண்டும் திருட வந்த போது வங்கியில் உள்ளவர்கள் புகாரின் பேரில் போலீஸார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த விமல்(40), டேனியல்(49), பெஞ்சமின்(31) என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ரூ.8 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பொதுமக்களை எப்படி ஏமாற்றுவார்கள் என போலீஸார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. மூன்று பேரில் ஒருவன் வங்கிக்குள் சென்று நோட்டம் பார்ப்பதும் அதிக அளவிலான தொகையை எடுக்கும் நடுத்தர வயதினரை குறிவைத்து வெளியில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுப்பார். வெளியே தயாராக இருக்கும் இருவரில் ஒருவர் சம்பந்தப்பட்ட நபர் வாகனத்தில் பணத்தை வைத்தவுடன் அவரிடம் பேச்சு கொடுத்து கவனத்தை திசை திருப்ப பார்ப்பார்.

அதில் கவனம் திரும்பினால் மூன்றாவது நபர் சாமர்த்தியமாக பணத்தை வாகனத்திலிருந்து எடுத்து முதல் நபரிடம் கொடுத்து விடுவார். அதிலும் அவர் மசியாவிட்டால் மூன்றாவது நபர் அவர்கள் கவனத்தை திசை திருப்ப எதாவது யுக்தியை கையாண்டு அவரிடமிருந்து பணத்தை அபகரித்து சென்று விடுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x