Published : 15 Jan 2018 05:16 PM
Last Updated : 15 Jan 2018 05:16 PM

மறைந்த பத்திரிகையாளர் ஞாநி உடல் சென்னை மருத்துவக் கல்லூரியிடம் தானமாக ஒப்படைப்பு

மறைந்த பத்திகையாளர், அரசியல் விமர்சகர் ஞாநியின் உடல் அவரது விருப்பத்தின்படி சென்னை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்க எடுத்து செல்லப்பட்டது.

பத்திரிகையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 64.

கடந்த சில காலமாகவே அவர் சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டுவந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஞாநியின் உடலுக்கு மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு, கி.வீரமணி, திருமாவளவன், மா.பா.பாண்டியராஜன், தமிழிசை சவுந்தராஜன், வானதி சீனிவாசன், ரஜினிகாந்த், நாசர், ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஞாநியின் உடல் அவரது விருப்பத்தின் அவரது இல்லத்திலிருந்து மாலை சென்னை  மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x