Published : 13 Jan 2018 05:09 PM
Last Updated : 13 Jan 2018 05:09 PM

15 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நடாக முதல்வர் சித்தராமையாவுக்கு தமிழக முதல்வர் கடிதம்

தமிழகத்தில் காவிரி பாசனப்பகுதிகளில் தண்ணீர் இன்றி வாடும் பயிர்களை காக்க உடனடியாக 15 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என, கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

‘‘காவிரி நடுவர் மன்றம் அளித்த உத்தரவின் படி 192 டிம்சி தண்ணீரை கர்நாடகா தமிழகத்திற்கு மாதந்திர அடிப்படையில் திறந்து விட வேண்டும். ஆனால், ஜனவரி 9ம் தேதி வரை 111.64 டிம்சி தண்ணீர் மட்டுமே கர்நாடகா திறந்து விட்டுள்ளது. கடந்த ஆண்டு வழக்கமான ஜூன் மாத்திற்கு பதில் அக்டோபர் மாதம் தான், சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் இந்த காலதாமதம் ஏற்பட்டது. எனினும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்ததால் அது, சாகுபடிக்கு உதவிகரமாக இருந்தது.

 எனினும் சில இடங்களில் அக்டோபர் மாதத்தில் பெய்த கனமழையால் சில இடங்களில் பலத்த பாதிப்பும் ஏற்பட்டது. இதையடுத்து கால தமதமாக சில இடங்களில் பயிர் நடவு செய்யப்பட்டது. அந்த பயிர்கள் ஒரளவு வளர்ந்துள்ள நிலையி்ல், அதற்கு தற்போது தண்ணீர் தேவை மிக அவசிமயமானது. கர்நாடகாவில் தற்போது சாகுபடி முழுமையாக முடிந்துள்ளது.. எனினும் அங்குள்ள அணைகளில் 49.82 டிஎம்சி அளவிற்கு தண்ணீர் உள்ளது.

ஆனால் மேட்டூர் அணையில் பயன்படுத்ததக்க அளவிலான தண்ணீர் 16.27 டிஎம்சி மட்டுமே உள்ளது. ஆனால் இந்த தண்ணீரை கொண்டு தமிழக காவிரி பாசனப்பகுதிகளில் சாகுபடியை முடிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே தமிழகத்தின் தேவையை கருத்தில் கொண்டு 15 டிஎம்சி தண்ணீரை உடனடியாக கர்நாடகா திறந்து விட வேண்டும். அதி்ல் 7 டிஎம்சியை உடனடியாகவும், மீதமுள்ள தண்ணீரை அடுத்த 15 நாட்களுக்குள்ளும் திறந்து விட வேண்டும்’’ எனக்கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x