Published : 01 Jan 2018 10:26 AM
Last Updated : 01 Jan 2018 10:26 AM

முரசொலி இணையதளத்தினுள் ஊடுருவிய ஹேக்கர்கள்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரபூர்வ நாளிதழ் முரசொலியின் இணையதளத்தினுள் ஹேக்கர்கள் ஊடுருவினர்.

முரசொலி இணையதளத்தில் ஊடுருவிய ஹேக்கர்கள் [Hacked by .F4rhAn] என்ற குறிப்பிட்டதோடு முகப்புப் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்தும் தெரிவித்திருந்தனர்.

மேலும், "இணையதளத்தை ஹேக்கர்கள் ஊடுருவாத வகையில் பாதுகாப்பாக வைத்தல் குறித்து முரசொலி இணைய நிர்வாகிகள் கற்றுக்கொள்ள வேண்டும். கவலைப்படாதீர்கள், உங்கள் பக்கத்தின் முகவரியை index.php யில் இருந்து newyear.php என்று மட்டுமே மாற்றியிருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். என் மீது அக்கறை காட்டிய இதயங்களுக்கும் என் முதுகுக்குப் பின்னால் பேசியவர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளான தை முதல் நாளையே திமுக புத்தாண்டு தினமாக அனுசரிக்கிறது. இந்நிலையில், ஹேக்கர்கள் முரசொலி பக்கத்தில் ஊடுருவி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருப்பது விஷமத்தனமானது என அதிருப்தி வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் ஹேக்கர்கள் ஊடுருவிய முரசொலி இணையதளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் மீட்கப்பட்டது. தற்போது இணைய பக்கம் வழக்கம்போல் செயல்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x