Published : 07 Dec 2017 09:52 AM
Last Updated : 07 Dec 2017 09:52 AM

திருச்சி அருகே பயங்கர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி

கன்னியாகுமரியிலிருந்து குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றவர்களின் சுற்றுலா வேன் திருச்சி அருகே நின்றிருந்த லாரிமீது பின்புறமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியானார்கள். காயத்துடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி நாகர்கோவில் கீழத்தெருவை சேர்ந்தவர் நடராஜன்(44) இவர் குடும்பத்தாருடன் டெம்போ டிராவலர் வேனில் திருப்பதிக்கு சென்றார். வேனை டிரைவர் ராகேஷ்(33) ஓட்டினார். திருச்சி வழியாக வேன் வந்துக்கொண்டிருந்தது. அதிகாலையில்  டெம்போ டிராவலர் துவரங்குறிச்சி காச மோர்னிமலை அருகில் சென்றபோது சாலையில்  நின்றிருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த போர்வெல் லாரியை ஓட்டுநர் கவனிக்காததால் லாரியின்  பின்புறத்தில் டெம்போ டிராவலர் வேன் பயங்கரமாக மோதியது.

 

இதில் டெம்போ டிராவலர் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. வேனில் பயணம் செய்த அத்தனை பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்து உயிருக்கு போராடியவர்களை தீயணைப்புத்துறையினர், போலீஸார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

விபத்தில் பலியான்வர்கள் விபரம்.

1, நந்தீஷ்(13)

2. ஜெய சந்தியா(10)

3) நடராஜன் (44)

4) வைத்திய லிங்கம் (79)

5) புஷ்கலா(38)

6) ஈஸ்வரன்

7) நீலா(5)

8. சொர்ணா (48)

9. அய்யப்பன் (44)

10.. சங்கர குமார் (43)

விபத்தில் படுகாயமடைந்தவர்கள்:

1.ஒட்டுநர் ராகேஷ்,(33)  

2. கார்த்திக்(12),

3. தனம்மாள்,(42)

4 வைஷ்ணவி (21)

5 வேல தேவி(35) காயமடைந்தவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காத திருச்சி அனுப்பபட உள்ளனர்

சாலையில் உரிய பாதுகாப்பு விளக்கு போடாமல் லாரியை நிறுத்தியிருந்ததும், ஓட்டுநர் ராகேஷ் வேகமாக வந்ததில் கவனிக்காமல் மோதியதும் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x