Published : 02 Dec 2017 08:36 PM
Last Updated : 02 Dec 2017 08:36 PM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளராக கரு.நாகராஜன் போட்டி- தமிழிசை அறிவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக கரு.நாகராஜன் களமிறக்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் தவிர டிடிவி தினகரன், ஜே.தீபா, கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட வேட்பாளர்களுடன் நடிகர் விஷாலும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பாஜக சார்பில் யார் என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் கரு.நாகராஜன் போட்டியிடுவார் என்று தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x