Published : 28 Nov 2017 09:27 PM
Last Updated : 28 Nov 2017 09:27 PM

வானிலை முன்னறிவிப்பு: தென் தமிழகம், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு

தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம், ''தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும்.

வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் அவ்வப்போது லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் கடல்பகுதி மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x