Published : 02 Nov 2017 03:24 PM
Last Updated : 02 Nov 2017 03:24 PM

ராமேஸ்வரத்தில் 1000க்கும் மேற்பட்ட பயணிகளை இலவசமாக ரயிலில் செல்ல அனுமதித்த நிர்வாகம்

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் அதிகாரி வராததால், 1000க்கும் மேற்பட்ட பயணிகளை ரயில்வே அதிகாரிகள் இலவசமாக ரயிலில் அனுப்பி வைத்தனர்.

ராமேஸ்வரம் சந்திப்பில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயிலுக்கான பயணச்சீட்டை வழங்க வேண்டிய அதிகாரி ரோஹித் அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருக்க வேண்டும். ஆனால், செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு பயணச்சீட்டு வாங்க கவுன்ட்டரில் பயணிகள் காத்திருந்த நிலையில் டிக்கெட் வழங்கும் அதிகாரி ரோஹித் வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயில்வே அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரயில் புறப்படும் வரை ரோஹித் வராததால் 1000க்கும் மேற்பட்ட பயணிகளை ரயில்வே நிர்வாகம் இலவசமாகவே ரயிலில் பயணம் செய்ய அனுமதித்தது.

டிக்கெட் வழங்கும் அதிகாரி ரோஹித் முந்தைய நாள் இரவில் அதிகம் மது அருந்தியதால் பணிக்கு வர இயலவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய் காலை 7.40 மணிக்கு தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி ரோஹித் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x