Published : 20 Oct 2017 06:42 PM
Last Updated : 20 Oct 2017 06:42 PM

நிலவேம்பு குடிநீர் குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை: அமைச்சர் தங்கமணி எச்சரிக்கை

அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் நிலவேம்பு குடிநீர் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மின்துறை அமைச்சர் தங்கமணி எச்சரித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கமணி, ''தமிழகத்தில் டெங்கு இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஜெயலலிதா வழியில் செயல்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் நிலவேம்பு குடிநீர் குறித்து தவறான முறையில் வதந்திகள் பரப்பப்படுகின்றன. நிலவேம்பு குடிநீரை குடிக்கக் கூடாது என்று யார் சொன்னாலும் மக்கள் மனதில் அதைக் குடிப்பதா, வேண்டாமா என்ற சந்தேகம் ஏற்பட்டுவிடும்.

டெங்குவை ஒழிக்க வேண்டும், டெங்கு வருகின்ற வழிகளை எல்லாம் அடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில்

நிலவேம்பு குடிநீர் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x