Published : 22 Sep 2017 05:27 PM
Last Updated : 22 Sep 2017 05:27 PM

ஜெயலலிதா நினைவிடத்தில் சீன தூதர் அஞ்சலி

தமிழகம் வந்த சீன தூதர் தனது குடும்பத்தாருடன் திடீரென மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

இந்தியாவுக்கான சீனதூதராக இருப்பவர் லோ சாஓஹுய். 1985-ல் ஆசியா வெளியுறவுத்துறை செயலராக பொறுப்பேற்ற இவர் 1989 ஆம் ஆண்டு வரை இந்த பதவியில் இருந்தார்.

1989 முதல் 1993 வரை சீனத்தூதரகத்தின் இரண்டாவது செயலராக பதவி வகித்தார். பின்னர் 1993 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டுவரை வட அமெரிக்காவில் சீன வெளியுறவு அதிகாரியாக பணியாற்றினார்.

96 ஆம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டுவரை அமெரிக்காவிற்கான சீனத்தூதரக அலுவலக இரண்டாம் நிலை செயலாளராக பணியாற்றினார். 2006 முதல் 2016 வரை பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரியாக பணியாற்றிய லோ சாஓஹுய் 2016-ம் ஆண்டு மீண்டும் இந்தியாவுக்கான சீனத்தூதராக நியமிக்கப்பட்டார்.

இந்தியாவுக்கான சீன தூதரான இவர் இன்று சென்னைக்கு நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்தார். பின்னர் திடீரென தனது மனைவி மற்றும் மகளுடன் ஜெயலலிதா நினைவிடத்துக்கு திடீர் விஜயம் செய்தார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர் சுமார் 15 நிமிடங்கள் அங்கிருந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்தியாவிற்கான சீனத்தூதர் திடீரென மெரினாவில் ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்தது போலீஸ் அதிகாரிகள் இடையே பரபரப்பையும், அங்கு வந்திருந்த அதிமுக தொண்டர்களிடையே ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x