Published : 21 Sep 2017 07:57 AM
Last Updated : 21 Sep 2017 07:57 AM

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம், வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி போன்ற காரணங்களால் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது தமிழகத்தில் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகத்தில் மாறுபாடு ஏற்படுவதால் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. எனவே இன்று தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x