Published : 02 Sep 2017 05:23 AM
Last Updated : 02 Sep 2017 05:23 AM

குண்டர் சட்டத்தில் கைதான மாணவி வளர்மதி: கோவை சிறையில் திடீர் உண்ணாவிரதம்

குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதான சேலம் மாணவி வளர்மதி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை சிறையில் உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார்.

தமிழ்நாடு பொதுநல மாணவர் எழுச்சி இயக்க சேலம் மாவட்டப் பொறுப்பாளரும், பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் மாணவியுமான வளர்மதி, கடந்த ஜூலை மாதம் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். sகோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டம், கடலூர், சிதம்பரம் மாவட்டங்களில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் ஆகியவற்றை கைவிட வேண்டும், தன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை எவ்வித நிபந்தனையும் இன்றி வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், சிறையில் தன்னைப் பார்க்க வருவோரை உளவுத் துறையினர் மிரட்டுவதைக் கண்டித்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x