Published : 18 Aug 2017 09:59 AM
Last Updated : 18 Aug 2017 09:59 AM

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள்: போலீஸ் அனுமதி இல்லாமல் எங்கும் சிலை வைக்க கூடாது - காவல் ஆணையர் அறிவுறுத்தல்

விநாயகர் சதுர்த்தி விழா பாது காப்பு ஏற்பாடுகளை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன் தீவிரப்படுத்தியுள்ளார். போலீஸ் அனுமதி இல்லாமல் எங்கும் சிலைகளை வைக்கக் கூடாது என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று இந்து அமைப்புகள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் என பல தரப்பினரும் ஆங்காங்கே விதவிதமான விநாயகர் சிலை களை வைத்து வழிபடுவர். பின்னர் அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல் உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.

கடந்த ஆண்டு சென்னையில் 2,650-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. களிமண்ணால் செய்யப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய சிலைகளும் கரைக்கப்பட்டன. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடு களை மாநகர காவல் ஆணை யர் ஏ.கே.விஸ்வநாதன் செய்து வருகிறார். சிலைகளை அமைக்க வுள்ள அமைப்புகளை அழைத்து 2 முறை ஆலோசனை நடத்தியுள்ளார். ‘போலீஸ் அனுமதி இல்லாமல் எந்த இடத்திலும் சிலைகள் வைக் கக் கூடாது. பதற்றம் நிறைந்த பகுதிகளில், பிற மதத்தினர் புண் படும் வகையிலான சுவரொட்டி களை ஒட்டக்கூடாது. ஊர் வலத்தை போலீஸார் அனுமதித்த பாதையில், குறிப்பிட்ட நேரத் துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்’ என பல அறிவுரைகளை அவர் வழங்கியுள்ளார்.

உரிய பாதுகாப்பு இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கடந்த முறை 34 அமைப்புகள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்திருந்தன. இந்த முறை 47 அமைப்புகள் சிலைகள் வைக்க அனுமதி கேட்டுள்ளன. எந்த ஒரு இடத்திலும் சிலை வைக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்று சிலை வைத்தால் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x