Published : 16 Aug 2017 09:02 AM
Last Updated : 16 Aug 2017 09:02 AM

தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு: காஞ்சிபுரத்தில் 110 மிமீ மழை பதிவு

தமிழகம் மற்றும் புதுவையின் பல இடங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம், புதுவையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், தம்மம்பட்டியில் 110 மிமீ மழையும், தேன்கனிக்கோட்டை, பெருங்கலூரில் 100 மிமீ மழையும் பெய்துள்ளது. சிவகங்கை, அஞ்செட்டியில் 90 மிமீ மழையும், புதுக்கோட்டையில் 80 மிமீ மழையும் பெய்துள்ளது. மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x