Published : 10 Aug 2017 09:31 AM
Last Updated : 10 Aug 2017 09:31 AM

மேல்மருவத்தூருக்கு அமைச்சர்கள் அடுத்தடுத்து வருகை: பங்காரு அடிகளாருடன் முதல்வர் சந்திப்பு - முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாக தகவல்

தமிழக முதல்வர் கே.பழனிசாமி மேல்மருவத்தூரில் உள்ள பங்காரு அடிகளாரை நேற்று சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து இருவரும் தனிமையில் 10 நிமிடங்கள் பேசினர். அப்போது முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாகத் தெரிகிறது.

மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்கு தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று வந்தார். ஆதிபராசக்தி கோயி லுக்கு வந்த முதல்வரை ஆதி பராசக்தி ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர்கள் கோ.ப.அன் பழகன், கோ.ப.செந்தில்குமார் ஆகியோர் பொன்னாடை அணி வித்தும், பூச்செண்டு கொடுத்தும் வரவேற்றனர்.

முதல்வருடன் தமிழக அமைச் சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, கருப்பண்ணன், டாக்டர் சரோஜா, ராஜலட்சுமி ஆகியோரும் உடன் வந்தனர். அனைவரும் ஆதிபராசக்தி கோயிலில் உள்ள அம்மன் கருவறைக்குச் சென்று வழிபாடு செய்தனர். அங்கு 108 தமிழ் மந்திரங்கள் ஒலிக்க குங்கும அர்ச்சனைகள் மற்றும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னர் புற்று மண்டபத்தில் உள்ள கன்னிக் கோயிலிலும் நாக தேவதை சன்னதியிலும் வழிபாடு செய்தனர்.

வழிபாடுகள் முடிந்ததும் முதலமைச்சரும், அமைச்சர்களும் அருட்கூடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு முதல் வரும், அமைச்சர்களும் பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து பங் காரு அடிகளாரும், முதல்வர் பழனிசாமியும் மட்டும் தனி யறையில் சுமார் 10 நிமிடங்கள் பேசினர். அப்போது யாரும் அந்த அறைக்குள் அனுமதிக்கப் படவில்லை. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள், அரசின் செயல்பாடுகள் குறித்து பேசி இருக்கலாம் எனத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அதர்வண பத்ரகாளி சன்னதிக்குச் சென்று அங்கும் வழிபாடு நடத்தினர். பின்னர் சித்தர் பீடத்தில் இருந்து விழுப்புரத்தில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக புறப்பட்டுச் சென்றனர்.

இவர்களைத் தொடர்ந்து தமிழக விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தனியாக பங்காரு அடிகளாரைச் சந்தித்து ஆசி பெற்றார். நேற்று முன்தினம் மாலை செங்கோட்டையன், திண்டுக் கல் சீனிவாசன், செல்லூர் ராஜு ஆகிய அமைச்சர்கள் சித்தர் பீடம் வந்து பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றுச் சென்றுள்ளனர் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித் தனர்.

முதலமைச்சர் மற்றும் 9 அமைச்சர்கள் அடுத்தடுத்து பங்காரு அடிகளாரைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x