Published : 06 Aug 2017 11:09 AM
Last Updated : 06 Aug 2017 11:09 AM

பாடங்களை படக் காட்சிகளாக பார்க்க அனைத்து பள்ளிகளிலும் ‘இமேஜ் பேங்க்’: பாடத்திட்டக் குழு தலைவர் அனந்தகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் புதிய பாடத் திட்டத்தை உருவாக்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத் துள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் சென்னை தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் கடந்த ஜூலை 15-ல் நடத்தப்பட்டது. 2-வது கூட்டம் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேற்று நடந்தது. புதிய பாடத் திட்டம் குறித்து இதில் ஆலோசிக் கப்பட்டது.

பின்னர் குழுத் தலைவர் எம்.அனந்தகிருஷ்ணன் கூறியதாவது:

அடுத்த ஆண்டு 1-ம் வகுப்பில் சேரும் மாணவர் பிளஸ்2 வகுப்புக்கு வரும்போது, ஒட்டுமொத்தமாக சூழலே மாறியிருக்கும். அதைக் கருத்தில்கொண்டு பாடத்திட்டம் வடிவமைப்பது குறித்து ஆலோ சித்து வருகிறோம். காலத்துக்கேற்ப அவ்வப்போது பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்.

மாணவர்களை எவ்வாறு தயார் செய்வது. ஆசிரியர்களுக்கு எந் தெந்த விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பதை விளக்க அவர்களுக்கு கையேடுகள் வழங்கப்படும். கல்லூரிகளுக்கு ‘நாக்’ தரச்சான்று அளிப்பதுபோல அரசு, தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும் தரச்சான்று வழங்க அமைப்பு ஏற்படுத்தப்படும்.

படிக்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக புத்தக வடிவமைப்பு, படங்கள் இருக்கவேண்டும். ‘கல்லணை’ தொடர்பான பாடத்தை மாணவர்கள் படிக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். இதற்காக, கல்லணையை நேரில் பார்க்க வாய்ப்பில்லை. எனவே, கல்லணை யின் படத்தைக் காட்டினால் மாண வர்கள் எளிதில் புரிந்துகொள் வார்கள். பாடம் தொடர்பான படங்களை மாணவர்களுக்கு காட்ட அனைத்து பள்ளிகளிலும் ‘இமேஜ் பேங்க்’ ஏற்படுத்த நடவ டிக்கை எடுக்கப்படும். வீடியோ காட்சிகளும் காட்டப்படும். இதற் கான தொழில்நுட்ப வசதிகள் பள்ளிகளுக்கு வழங்கப்படும். முதலில் 3,000 அரசுப் பள்ளிகளில் ‘இமேஜ் பேங்க்’ ஏற்படுத்தப்படும்.

பாடத்திட்டத்தை வடிவமைப்பது குறித்து பொதுமக்கள், ஆசிரியர் கள், மாணவர்களிடம் கருத்து கேட்க இம்மாதத்தில் மதுரை (9-ம் தேதி), கோவை (11-ம் தேதி), சென்னை (22-ம் தேதி), தஞ்சாவூர் (24-ம் தேதி) ஆகிய பகுதிகளில் கூட்டங்கள் நடத்தப்படும். மாண வர்கள் எந்தவிதமான உயர் கல்வியைத் தேர்ந்தெடுப்பது என்பது தொடர்பாக 9-ம் வகுப்பு முதல் கவுன்சலிங் தரப்படும். அதில் புதிய படிப்புகள், புதிய கல்வி நிலையங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x