Published : 01 Aug 2017 09:34 AM
Last Updated : 01 Aug 2017 09:34 AM

ஓபிஎஸ் கிணறுக்கு விதிமீறி மின்இணைப்பு வழக்கு: நீதிமன்றத்தில் தேனி ஆட்சியர் இன்று அறிக்கை தாக்கல்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல் வத்தின் மனைவிக்குச் சொந்த மான கிணறுக்கு விதிகளை மீறி மின் இணைப்பு கொடுக்கப்பட் டுள்ளதாக தொடரப்பட்ட வழக் கில் உயர் நீதிமன்றத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை தாக்கல் செய்கிறார்.

தேனி அருகே உள்ள லெட்சுமி புரம் ஊராட்சி மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் கிணறுக்கு அருகே ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி பெயரில் நிலம் உள்ளது. இங்கு மெகா கிணறு தோண்டப்பட்டது. இதனால் ஊராட்சி கிணறு வறண்டது. இதையடுத்து லெட்சுமிபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது கிணற்றை ஊராட்சியிடம் ஒப்படைக்கக் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்களை பொது மக்கள் நடத்தினர்.

பொதுநல வழக்கு

இந்நிலையில், லெட்சுமிபுரத் தைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ஆற்றுப்படுகையில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நிலத்துக்கு மின் இணைப்பு வழங்கக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் 15 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கிணற்றுக்கு விதிகளை மீறி மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். வணிக நோக்கில் கிணற்றில் தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதை விசாரித்த நீதிபதிகள், கிணற்றில் போதிய நீர் உள்ளதா, ஆற்றுப்படுகையில் இருந்து எத்தனை மீட்டர் தூரத்தில் கிணறு அமைந்துள்ளது, இதில் விதிமீறல்கள் ஏதும் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்து ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் தேனி மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

இதையடுத்து தேனி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடாசலம் கிணறு அமைந்துள்ள நிலத்தை அண்மையில் நேரில் பார்வை யிட்டார். இந்த ஆய்வு அறிக்கை இன்று (ஆக.1) உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பத்திரப் பதிவு தாமதம்

கிணற்றை ஊராட்சி நிர்வாகத் துக்கு தானமாக வழங்குவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறியதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் பத்திரப்பதிவு நேற்று நடைபெறும் என கிராம மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நடைபெறவில்லை.

இது குறித்து கிராம கமிட்டி யினர் கூறியதாவது:

உயர் நீதிமன்ற கிளையில் உள்ள வழக்கு இன்று விசா ரணைக்கு வருகிறது. இதை முடித்துவிட்டு பத்திரவுப் பதிவு செய்து கொடுக்கலாம் என தாமதப் படுத்துவதுபோல் தெரிகிறது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x