Published : 17 Feb 2017 08:41 AM
Last Updated : 17 Feb 2017 08:41 AM

5 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் இடம்பெற்ற செங்கோட்டையன்

அமைச்சரவையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு 5 ஆண்டு களுக்குப் பிறகு, அதிமுக அமைச் சரவையில் கே.ஏ.செங்கோட்டையனுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

கோபி அருகே குள்ளம்பாளை யத்தில் கே.எஸ்.அர்த்தனாரி கவுண்டர்- காளியம்மாள் தம்பதி யினரின் மகன் கே.ஏ.செங்கோட் டையன்(68). எஸ்எஸ்எல்சி வரை படித்தவர். மனைவி ஈஸ்வரி, மகன் கதிரீஸ்வரன் கோவையில் கல்லூரி நடத்தி வருகிறார்.

எம்.ஜி.ஆர். காலம் முதல் அதிமுகவில் பணியாற்றி வரும் செங்கோட்டையன் குள்ளம் பாளையம் ஊராட்சி தலைவர் பதவியில் தொடங்கி, சத்திய மங்கலம் சட்டப்பேரவை தொகுதி யில் 1977-ம் ஆண்டு அதிமுக எம்எல்ஏவாக தேர்வு பெற்று முதன்முறையாக சட்டப்பேரவை யில் நுழைந்தார்.

கோபி சட்டப்பேரவைத் தொகுதியில் 1980, 1984-ல் நடந்த தேர்தல்களில் அதிமுக சார்பிலும், 1989-ல் அதிமுக ஜெயலலிதா அணி சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991-ம் ஆண்டு கோபி தொகுதியில் வெற்றி பெற்ற செங்கோட்டையன், ஜெய லலிதா தலமையிலான அமைச் சரவையில் முதன்முறையாக போக்குவரத்துத் துறை அமைச் சராக பொறுப்பு வகித்தார். அதன் பிறகு வனத்துறை அவருக்கு ஒதுக்கப்பட்டது.

1996-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில் கோபி தொகுதி யில் போட்டியிட்டு தோல்வி யடைந்தார். 2001-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, சொத்துக் குவிப்பு வழக்கு செங்கோட்டையன் மீது இருந்த தால், அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. தொடர்ந்து 2006-ம் ஆண்டு கோபி தொகுதி யில் வெற்றி பெற்ற செங் கோட்டையன், சட்டப்பேரவையில் அதிமுக கொறடாவாக பதவி வகித்தார்.

2011-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அப்போதைய அதிமுக அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச் சராக பதவி வகித்தார். குறுகிய காலத்தில் தகவல் தொழில்நுட்பம், வருவாய்த் துறை என ஓராண்டுக்குள் இலாகா மாற்றம் செய்யப்பட்ட செங்கோட்டையனிடம் இருந்து, 2012-ம் ஆண்டு அவரது அமைச் சர் பதவி பறிக்கப்பட்டது.

ஜெ. மறைவுக்குப் பின்..

2016-ம் ஆண்டு கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற செங்கோட்டையனுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வில்லை. தற்போது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த மாஃபா பாண்டியராஜன் வகித்து வந்த பள்ளிக்கல்வித் துறை, சசிகலா ஆதரவு நிலை எடுத்த செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட அதிமுக செயலாளர், அதிமுக தலைமை நிலையச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ள செங்கோட்டையன், தற்போது சசிகலாவால் அதிமுக அவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x