Published : 26 Apr 2015 11:30 AM
Last Updated : 26 Apr 2015 11:30 AM

4 பொதுத்துறை காப்பீட்டு நிறுவன இணைப்பு அவசியம்: இந்து என்.ராம் கருத்து

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றிணைப்பது அவசியமானது என்று ‘இந்து’ என்.ராம் தெரிவித்தார்.

இந்தியாவில் யுனைடெட் இந்தியா, நேஷனல், ஓரியண்டல் மற்றும் நியு இந்தியா ஆகிய 4 பொது காப்பீட்டு நிறுவனங்களும், 17 தனியார் காப்பீட்டு நிறுவனங் களும் உள்ளன. தனியார் நிறுவனங்களின் போட்டியை எதிர் கொண்டு, சமூக நோக்கத்துடன் செயல்படும் திட்டங்களை மேலும் தீவிரமாக அமல்படுத்த, 4 பொதுத்துறை நிறுவனங்களையும் ஒரே நிறுவனமாக ஒருங்கிணைக்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக பொது காப்பீட்டு நிறுவன ஊழியர் சங்கங்கள் இணைந்து, சென்னை யில் நேற்று கருத்தரங்கு நடத்தின. இந்தக் கருத்தரங்கை தொடங்கி வைத்து ‘இந்து’ என்.ராம் பேசியதாவது:

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றிணைப்பது அவசியமானதாகும். பொது காப்பீட்டு நிறுவனங்கள், தங்களுக் குள் இருக்கும் போட்டியை விலக்கி, ஒன்றாக வலுவாக செயல்பட வேண்டும் என்பதற்காக அனைத்து ஊழியர்களும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்து கின்றனர். இதை நிராகரிக்க அரசிடம் எந்த சரியான காரணமும் கிடையாது. இதுவரை இதைச் செய்யத் தவறியதற்கு தற்போதுள்ள பாஜக அரசும், முந்தைய காங்கிரஸ் அரசும் பொறுப்பேற்க வேண்டும்.

வகுப்புவாதம்

மத்திய பாஜக அரசு, நவீன தாராளமய கொள்கைகளை அமல்படுத்துவது மட்டுமல்லாமல் வகுப்புவாத கொள்கைகளையும் அமல்படுத்தி வருகிறது. மதச்சார்பின்மை என்பது பழைய கோட்பாடாகவும், வகுப்புவாதம் புதிய பேஷனாகவும் மாறிவிட்டது.

இவ்வாறு என்.ராம் பேசினார்.

சமூக நோக்கம்

அகில இந்திய பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பி.கே.தரம்தோக் பேசும்போது, ‘‘குடிசை, கால்நடை, பயிர் காப்பீடு போன்ற பல்வேறு காப்பீடுகளை வழங்கி சமூக நோக்கத்துடன் செயல்படுவது பொதுத்துறை நிறுவனங்கள்தான். தனியார் நிறுவனங்கள் கிராமங்களில் உள்ள சாதாரண மக்களை சென்றடைவதில்லை.

4 பொதுத் துறை நிறுவனங்களின் மொத்தப் பிரீமிய தொகை ரூ.45 ஆயிரத்து 125 கோடியாகும். ஆனால், 17 தனியார் நிறுவனங்களின் பிரீமியத் தொகை ரூ.35 ஆயிரம் கோடிதான்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x