Published : 28 Jun 2017 09:44 AM
Last Updated : 28 Jun 2017 09:44 AM

3 நாள் வேலைநிறுத்தம் தொடங்கியது: ஜிஎஸ்டியில் விலக்கு கோரி ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் கோவை, திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை

ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்கக் கோரி, தமிழகத்தில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கின.

மத்திய அரசு ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டியை அமல் படுத்துகிறது. ஜிஎஸ்டியில் பருத்தி நூலுக்கு 5 சதவீதம், பாலியஸ்டர் நூலுக்கு 18 சதவீதம், ஜவுளி விற் பனைக்கு 5 சதவீத வரி விதிக்கப் பட்டுள்ளது. சாயமிடுதல், நெசவு, தையல், முடி போடுதல், பேக்கிங் உள்ளிட்ட ஜாப் வொர்க் உற்பத் திக்கும் வரி விதித்துள்ளனர். இத னால், சிறு மற்றும் குறுந்தொழில்கள் பெரிதும் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

எனவே, ஜிஎஸ்டியில் இருந்து ஜவுளி தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய அளவில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் கரூர் நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தி யாளர்கள் சங்கத்தினர் தங்கள் நிறுவனங்களை நேற்று அடைத் திருந்தனர்.

கரூர் நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.தனபதி, செயலாளர் சுரேந்தர், கரூர் கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.காளியப்பன் உள்ளிட்டோர் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜிடம் நேற்று மனு அளித்தனர்.

இதுகுறித்து ஆர்.தனபதி கூறும்போது, “கரூர் மாவட்டத்தில் நெசவு, கைத்தறி சங்கங்களை சேர்ந்த 400 தொழில் நிறுவனங் கள், அதனைச் சார்ந்த 2,000 விசைத் தறி கூடங்கள் இன்று (நேற்று) முதல் 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள் ளன. இதனால், 20,000 தொழி லாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும்” என்றார்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் ஆயிரத்துக் கும் மேற்பட்ட விசைத்தறி, கைத்தறி மற்றும் ஜவுளி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஜவுளித் தொழிலை நம்பி 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். கடையடைப்பு காரணமாக, சேலம் மாவட்டத்தில் தினமும் ரூ.100 கோடி மதிப்புக்கு ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்படும், என சேலம் கைத்தறி ஜவுளி மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் முருகன் கூறினார்.

நாமக்கல் மாவட்டத்தில் 5 லட் சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் நேற்று இயங்கவில்லை. இதனால், வேட்டி, துண்டு, லுங்கி, பெட்ஷீட் உள்ளிட்ட ஏற்றுமதி வகை துணி ரகங்கள் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளதாக குமாரபாளையம் ஜவுளி உற்பத்தியாளர்கள், விற்ப னையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் சிவசக்தி சண்முகசுந்தரம் கூறினார்.

ஈரோடு மாவட்டத்தில் 5 ஆயிரத் துக்கும் மேற்பட்ட ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் நேற்று இயங்க வில்லை. பன்னீர்செல்வம் பூங்கா, ஈஸ்வரன் கோயில் வீதி, பிருந்தா வீதி, திருநகர் காலனி, கருங்கல் பாளையம், அசோகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப் பட்டு, கருப்புக்கொடிகள் கட்டப் பட்டு இருந்தன. ஈரோடு மாவட் டத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ.30 கோடி வீதம் ஜவுளி உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட் டுள்ளதாக, ஈரோடு ஜவுளி வணிகர்கள் சங்கத்தின் (எக்மா) தலைவர் ரவிச்சந்திரன் கூறினார்.

கோவை

கைத்தறியைப் போல சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து விசைத்தறி ஜவுளி உற்பத்திக்கும் விலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழகத்தில் நேற்று விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால், இந்த வேலைநிறுத்தத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான விசைத் தறி உரிமையாளர்கள் பங்கேற்க வில்லை என தெரிவிக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க (சோமனூர்) பொருளாளர் ஈ.பூபதி கூறும்போது, ‘சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விசைத்தறி ஜவுளி உற்பத்திக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஜூலை 1-ம் தேதி வெளியாகும் சரக்கு மற்றும் சேவை வரி அறிவிப்பில் இதற்கான முடிவுகள் தெரியவரும். அதன்பிறகு, கோரிக்கை தொடர் பான அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்’ என்றார்.

சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள விசைத்தறிக் கூடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இயந்திரங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x