Published : 08 Feb 2017 10:07 AM
Last Updated : 08 Feb 2017 10:07 AM

257 நாடுகளின் பணம், நாணயம், அஞ்சல்தலை சேகரிப்பு: ‘யுனிக் வோர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம்பிடித்த பாலாஜி

உலகில் உள்ள 257 நாடுகளின் பணம், நாணயங்கள், அஞ்சல் தலைகள் ஆகியவற்றை ஒருசேர சேகரித்து ‘யுனிக் வோர்ல்டு ரெக் கார்டு’ சாதனை படைத்திருக்கிறார் திண்டிவனத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கே.பாலாஜி.

“இந்த சேகரிப்பு பழக்கம் எனக்கு ஏழு வயதில் தொடங்கிய தாகம்; இன்னும் அடங்கவில்லை” என்கிறார் பாலாஜி. இவரிடம் 257 நாடுகளைச் சேர்ந்த 5,353 நாண யங்கள், 5,301 கரன்சி நோட்டுகள் (ஒவ்வொரு நாட்டுக்கும் குறைந்த பட்சம் 3 முகமதிப்பு கொண்ட கரன்சி நோட்டுகள்), 5,736 அஞ்சல் தலைகள் தற்போது சேகரிப்பில் உள்ளன. இவை அனைத்தும் இந்தியா தவிர்த்து பிற நாடுகளைச் சேர்ந்தவை. இவை தவிர, 1884 முதல் 2016 வரை புழக்கத்தில் இருந்த 4,376 விதமான இந்திய நாணயங்கள் இவர் வசம். இந்திய அஞ்சல் தலைகள் மட்டுமே 6,612 இவரிடம் உள்ளன.

இதுகுறித்து ’தி இந்து’விடம் பாலாஜி கூறியதாவது: ‘‘13 வயது வரை பொழுதுபோக்காகத் தான் இந்த சேகரிப்பு பழக்கத்தை வைத்திருந்தேன். 13 வயதுக்கு பிறகு தான் நாணயம், பணம், அஞ்சல் தலை சேகரிப்பில் இதுவரை யாருமே செய்யாத அளவுக்கு உலக சாதனைப் படைக்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்குள் உதித்தது. அதற்கு முன்புவரை வெளிநாடுகளில் உள்ள எனது உறவினர்கள் மூலமாக வெளி நாட்டு நாணயங்கள், அஞ்சல் தலைகள், பணம் ஆகியவற்றை சேகரித்துக் கொண்டிருந்தேன். பிறகு, என்னைப் போல சேகரிப்பில் இருப்பவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களிடமிருந்தும் அரிய நாணயங்கள், கரன்சி நோட்டுகள், அஞ்சல் தலைகளைத் திரட்ட ஆரம்பித்தேன்.

உறவுகள் என்னை விமர்சித் தாலும் முன்னாள் ராணுவ வீரரான எனது பெரியப்பா ராமமூர்த்தி மட் டும் தொடர்ந்து என்னை உற்சாகப் படுத்திக்கொண்டே இருந்தார். எனது சேகரிப்புக்காக மாதா மாதம் ஐயாயிரம் ரூபாய் வரை தந்தார். அஞ்சல் துறையில் பணியாற்றும் எனது சித்தி, மாமா மூலமாக அஞ்சல் தலைகள் சம்பந்தப்பட்ட பல அரிய தகவல்களைச் சேகரிக்க முடிந்தது.

‘டிப்ளமோ’ முடிக்கும் வரை 179 நாடுகளின் நாணயங்கள் மற் றும் கரன்சிகளையும், 188 நாடுக ளின் அஞ்சல் தலைகளையும் மட்டுமே சேகரிக்க முடிந்தது. பொறியியல் படிப்பில் சேர்ந்த பிறகு பகுதி நேரமாக ‘டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்’ உள்ளிட்ட வேலைகளைச் செய்ததால் ஓரள வுக்கு சுய வருமானம் வந்தது. அதைக்கொண்டு இன்னும் சேகரிக்க ஆரம்பித்தேன். இதுவரை இந்த சேகரிப்புகளுக்காக கடந்த 17 ஆண்டுகளில் சுமார் 8 லட்ச ரூபாய் வரை செலவு செய்திருப்பேன். நாணயங்கள் சேகரிப்புக்காக 63 புத்தகங்களையும், கரன்சி நோட்டு களுக்காக 54 புத்தகங்களையும் அஞ்சல் தலைகளுக்காக 169 புத்த கங்களையும் படித்திருக்கிறேன்’’ என்றார்.

257 நாடுகளைச் சேர்ந்த நாண யங்கள், பணம், நாணயங்களைச் சேகரித்தமைக்காக உலக சாத னையாளர்களுக்காக இந்தியா வில் வெளியிடப்படும் ‘யுனிக் வோர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார் பாலாஜி. இதற்காக இவர் சமர்ப்பித்த 4,000 பக்கங்கள் கொண்ட பதிவு களைப் பரிசோதனைக்கு எடுத்து, நாணயங்கள், அஞ்சல் தலைகள், பணம் ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாக ‘யுனிக் வோர்ல்டு ரெக்கார்டு’ விருது வழங்கி இருக் கிறார்கள்.

இம்மூன்றையும் ஒரே சமயத் தில் சேகரித்தமைக்காகவும் இந்தியாவின் அரிய நாணயங்களை சேகரித்தமைக்காகவும் மேலும் 2 விருதுகளை வழங்கி இருக்கிறது ‘யுனிக் வோர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம். இவ்விருதுகள் கடந்த 2-ம் தேதி பாலாஜிக்கு வழங்கப் பட்டுள்ளன. அடுத்த கட்டமாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிப் பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார் பாலாஜி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x