Published : 27 Jun 2017 05:41 PM
Last Updated : 27 Jun 2017 05:41 PM

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்காதது ஏன்?- 20 கேள்விகளுக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந் தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்காதது ஏன் என்பது குறித் தும், இதை கட்டாயமாக்காதது ஏன் என்பது குறித்தும் அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பந்த நல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி மறுத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அப்பள்ளி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்க தமிழக அரசு கடந்த 2012-ல் உத்தரவிட்டது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் ஆங்கில வழி வகுப்பு கள் தொடங்க அனுமதி மறுப் பது பாரபட்சமானது. எனவே எங்களது பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனு மதிக்க உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் நேற்று அரசுக்கு 20 கேள்விகளை எழுப்பி பிறப்பித்த உத்தரவில் கூறி யிருப்பதாவது:

கல்வி என்ற மிகப்பெரிய ஆயுதம் கொண்டு உலகையே மாற்றலாம் என நெல்சன் மண் டேலா கூறியுள்ளார். கல்வி யில் கிராமப் புற மாணவர் கள் புறக்கணிக்கப்படுகின்ற னர். தமிழ் வழி ஆசிரியர்களே ஆங்கில வழிப் பாடத்தையும் நடத்துவதால், ஆங்கில வழி வகுப்புகளுக்கு அனுமதி யளிப்பதால் எந்த உபயோக மும் இல்லை. இதேநிலை தொடர்ந்தால் கிராமப்புற மாணவர்களை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.

பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குறித்த நேரத்துக்கு பள்ளிக்குச் செல் வது கிடையாது. முறையாக வகுப்புகளை நடத்துவது கிடையாது. பலர் பகுதி நேர தொழில் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அரசுப் பள்ளியின் தரம் எப்படி உயரும்? அரசுப் பள்ளி ஆசிரி யர்கள் அர்ப்பணிப்புடன் பணி யாற்றினால் ஒழிய நமது எதிர் காலம் பிரகாசமாக இருக்காது என்றார். பின்னர், சரமாரியாக கேள்விகளை எழுப்பிய நீதி பதி அவற்றுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டார்.

நீதிபதி எழுப்பிய 20 கேள்விகள்

l அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்காதது ஏன்? அதை அரசு கட்டாயமாக்காதது ஏன்?

l 2012-க்குப் பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப் பட்டுள்ளன?

l அந்த வகுப்புகளில் தற்போது எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்?

l தமிழ்வழி ஆசிரியர்களே அங்கு ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகின்றனரா?

l ஆங்கில வழி வகுப்பை நடத்த அங்கு பயிற்சி பெற்ற வேறு ஏதேனும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா?

l அரசுப் பள்ளியை விடுத்து பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கு செல்வது ஏன்?

l குறித்த நேரத்துக்கு வராத ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

l ஆசிரியர்கள் சங்கங்கள் தொடங்குவதை ஏன் தடை செய்யக்கூடாது?

l ஊரகப்பகுதிகளில் அரசுப் பள்ளிகளை நிர்வகிக்க தொண்டு நிறுவனங்களை ஏன் அனுமதிக்கக்கூடாது?

l பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதை ஏன் தடை செய்யக்கூடாது?

l இதுவரை எத்தனை ஆங்கில வழி ஆசி ரியர்கள் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்?

l எந்த தகுதியின் அடிப்படையில் அவர்கள் நியமிக்கப்படுகின்றனர்?.

l அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்காணிக்க தமிழக அரசு பறக்கும் படையை அமைத்துள்ளதா?

l கிராமப்புற, மலைப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காலதாமதமாக வரு வதை கண்டறிய ஏன் பயோ-மெட்ரிக் எனப் படும் கைவிரல் ரேகைப் பதிவு இயந்திரத்தை பொருத்தக் கூடாது?

l ஆசிரியர்களின் வருகையை நாள் முழு வதும் கண்காணிக்க வகுப்பறையில் சிசிடிவி கேமரா பொருத்த வாய்ப்புள்ளதா?

l கடந்த 10 ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதம் என்ன?

l கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் என்ன?

l கடந்த 10 ஆண்டுகளில் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன?

l மாறிவரும் கல்வி கற்பிக்கும் முறைக் கேற்ப தமிழக அரசு ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்குகிறதா?

l அரசு ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊரில் பணிபுரிவதைத் தடுக்க மாநில மற்றும் மாவட்ட வாரியாக அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் நடைபெறுகிறதா?

என்பது குறித்து வரும் ஜூலை 14-ம் தேதிக் குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையைத் தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x