Published : 07 Sep 2015 10:40 AM
Last Updated : 07 Sep 2015 10:40 AM

12 சர்க்கரை ஆலைகளில் மின் நிலையம், இயந்திரங்கள் நவீனமயமாக்கல்: ரூ.1,241 கோடியில் திட்டப்பணிகள்

தமிழகத்தில் உள்ள 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் ரூ.1241.65 கோடியில் 183 மெகாவாட் இணை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

தமிழகத்தில் உள்ள 46 சர்க்கரை ஆலைகளில், 25 தனியார் ஆலைகள், 16 கூட்டுறவு ஆலைகள், 2 பொதுத்துறை ஆலைகள் என 43 ஆலைகள் இயக்கத்தில் உள்ளன.

இந்த ஆலைகளில் கரும்பு சக்கை, கழிவுப்பாகு, கழிவு மண், மின்சாரம் போன்றவை உப உற்பத்தி பொருட்களாகும். இவற்றின் மூலம் ஆலைகளுக்கு வருமானம் கிடைக்கிறது.

கரும்பு சக்கை மூலம் 2014-15, 2015-16 ஜூன் வரை, ரூ.10.70 கோடி, கழிவுப்பாகு மூலம் ரூ.102.16 கோடி, கழிவுப்பாகில் இருந்து கிடைக்கும் எத்தனால் மூலம் ரூ.44.26 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

கூட்டுறவு சர்க்கரை ஆலை களில் கடலூர் எம்.ஆர்.கே.ஆலை மற்றும் செய்யாறு ஆலைகளில் தலா 7.5 மெகாவாட், சுப்பிர மணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 5 மெகாவாட் திறனில் இணை மின் உற்பத்தி நிலையங் கள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் கடந்தாண்டும், இந்தாண்டு ஜூன் வரையும் சேர்த்து ரூ.1.21 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இது தவிர, தற்போது நாமக்கல், தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மதுரை, பெரம்பலூர், தஞ்சை மாவட்டங்களில் உள்ள 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் மின் உற்பத்திக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக ரூ.964.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் 183 மெகாவாட் திறன் கொண்ட இணை மின் உற்பத்தி நிலையங்கள் சர்க்கரை ஆலைகளில் நிறுவப்பட்டு வருகின்றன.

வேலூர், திருவண்ணா மலை மாவட்டம் செய்யாறு மற்றும் விழுப்புரம் மாவட்டம் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இப்பணிகள் இந்தாண்டு நவம்பர் மாதம் முடியும். மற்ற அரசுத்துறை ஆலைகளில் பணிகள் முடிக் கப்பட்டு, மின் உற்பத்தி தொடங்க உள்ளது. இணை மின் உற்பத்தி திட்டத்துடன் இந்த 12 சர்க்கரை ஆலைகளில் ஆலை இயந்திரங் களை நவீனப்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

இந்த ஆலைகளில் சர்க்கரை உற்பத்திக்கு தேவையான மின் சக்தி மற்றும் நீராவி பயன்பாட்டை குறைத்து, மின்சாரத்தை விற்கும் அளவை அதிகரிக்க ரூ.276.27 கோடியில் ஆலை இயந்திரங்களை நவீனப்படுத்தும் பணிகளும் நடக்கின்றன.

இதில், தருமபுரி, சேலம் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி-1, 2 கூட்டுறவு ஆலைகள் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மேம்பாட்டு பணிகள் முடிந்துள்ளன. வேலூர், செய்யாறு மற்றும் செங்கல் வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேம்பாட்டுப் பணிகள் இந்தாண்டு நவம்பருக்குள் முடியும் என தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 25 தனியார், 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை ஆலைகள் என 43 ஆலைகள் இயக்கத்தில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x