Published : 19 May 2017 10:10 AM
Last Updated : 19 May 2017 10:10 AM

10-ம் வகுப்பு தேர்விலும் விருதுநகர் மாவட்டம் முதலிடம்

10-ம் வகுப்பு பொதுத் தேர்விலும் விருதுநகர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது.

எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. பிளஸ் 2 தேர்வு போல, இதற்கும் ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை. மொத்த தேர்ச்சி விகிதம் 94.4% ஆகும். இது கடந்த ஆண்டைவிட 0.8% அதிகம்.

விருதுநகர் மாவட்ட தேர்ச்சி விகிதம் 98.55%.

தேர்ச்சி விகிதம்:

இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.4%. மாணவர்கள் தேர்சசி விகிதம் 92.5%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.2%. இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர்.

விருதுநகருக்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி மாவட்டம் 98.17% தேர்ச்சி விகிதம், ராமநாதபுரம் மாவட்டம் தேர்ச்சி விகிதம் 98.16% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x