Published : 28 Mar 2017 08:59 AM
Last Updated : 28 Mar 2017 08:59 AM

‘வெள்ளம் வந்தபோது யாரும் வரவில்லையே’- டிடிவி தினகரனை முற்றுகையிட்ட மக்கள்

ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன், கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் நேற்று பிரச்சாரத் தில் ஈடுபட்டார். அவருடன் அமைச் சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பா.பெஞ்சமின் உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித் தனர்.

அப்போது பெண்கள் சிலர் தினகரனை முற்றுகையிட்டு, ‘‘வெள்ளத்தின்போது எங்கள் உடை மைகள் உட்பட ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புடைய பொருட் கள் அழிந்தன. ஆனால், எங்க ளுக்கு அரசின் நிவாரணம் ரூ.5 ஆயிரம்கூட கிடைக்கவில்லை. எங்க ளுக்கு ஆறுதல் கூறக் கூட கட்சிக் காரர்கள் யாரும் வர வில்லை’’ என கோபமாகக் கூறினர். அவர்களை தினகரனுடன் வந்தவர்கள் சமாதானப்படுத்த முயன்றனர்.

குடிசை பகுதி மக்கள்

பின்னர், ஆட்டோவில் பிரச்சாரம் செய்த தினகரனை அப்பகுதி குடிசைவாசிகள் வழிமறித்து, ‘‘ஜெயலலிதா மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட பிறகு, எங்களை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. எங்களுக்கு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு கொடுப்பதாக ஜெய லலிதா உறுதி அளித்திருந்தார். அதற்கான கோப்புகளும் தயார் செய்யப்பட்டன.

முதல்வர் மறைவுக்குப் பிறகு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது’’ என்றனர். ‘‘ஜெயலலிதா அறிவித்த திட்டத்தை முடித்துக் கொடுக்கிறேன்’’ என தினகரன் உறுதியளித்தார்.

பின்னர் நிருபர்களிடம் தினகரன் கூறியதாவது:

இந்த தொகுதியில் உள்ள பொதுமக்கள், ஜெயலலிதாவிடம் 57 ஆயிரம் கோரிக்கை மனுக்களைக் கொடுத்துள்ளனர். அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன். சொந்தமாக வீடு வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருப்போம். அதனால், அவர் களின் கோரிக்கைகளை நிறை வேற்றுவோம்.

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கொடுங்கையூர் குப்பை மேட்டை, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் அகற்றி, அங்கு குடி யிருப்பு, பூங்காக்களை கட்டித் தருவேன். அதிக இளைஞர்கள் உள்ள தொகுதி என்பதால் தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம் கள் நடத்தப்படும். இந்த தொகு தியை,முன்மாதிரி தொகுதியாக ஜெயலலிதா மாற்ற விரும்பினார். அதை நிறைவேற்றுவேன்.

மதுசூதனன் மீது புகார்

மதுசூதனனுக்கு மின்கம்பம் சின்னம்தான் வழங்கப்பட்டது. ஆனால், அந்தக் கட்சியினர் இரட்டை விளக்கு மின்கம்பம் என பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க இருக்கிறோம்.

இவ்வாறு தினகரன் கூறினார்.

தேர்தல் வாக்குறுதிகள்

அதிமுக அம்மா கட்சி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார்.

வீடில்லா 57 ஆயிரம் பேருக்கு வீடு, தண்டையார்பேட்டையில் அனைத்து வசதிகளுடன் கூடிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, 10 நடமாடும் மருத்துவமனைகள், வேலைவாய்ப்பு ஆலோசனை மையம், புதிய மீன் அங்காடி, முக்கிய பேருந்து நிறுத்தங்கள், சாலையோர பூங்காக்களில் கைபேசி சார்ஜிங் மற்றும் கட்டணமில்லா வைபை இணைய வசதி என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அதில் வழங்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x