Published : 05 Dec 2014 10:24 AM
Last Updated : 05 Dec 2014 10:24 AM

வியாசர்பாடியில் பெண் மர்ம மரணம்: உறவினர்கள் சாலை மறியல்

சென்னை யானைக்கவுனி குடிசை மாற்று வாரிய பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் ஜெயஸ்ரீ(22). வீட்டருகே உள்ள பாத்திரங்களை பாலீஷ் செய்யும் பட்டறையில் வேலை செய்தார். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி காலையில் வேலைக்கு சென்ற ஜெயஸ்ரீ மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் வேலை செய்த நிறுவனத்தில் சென்று விசாரித்தபோது, ஜெயஸ்ரீ அன்று வேலைக்கே வரவில்லை என்று கூறியுள்ளனர். அதைத் தொடர்ந்து யானைக்கவுனி காவல் நிலையத்தில் கடந்த 1-ம் தேதி முனுசாமி புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ஜெயஸ்ரீயின் செல் போன் எண்ணில் இருந்து முனு சாமியை ஒருவர் தொடர்பு கொண்டு, ஜெயஸ்ரீ கள்ளக்குறிச்சியில் ஒரு இடத்தில் இருப்பதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து முனுசாமியும், சென்னை போலீஸா ரும் கள்ளக்குறிச்சிக்கு சென்று ஜெயஸ்ரீயை சென்னைக்கு அழைத்து வந்தனர். வியாசர்பாடி யில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த ஜெயக்கு உடல்நிலை சரியில்லா மல் போகவே, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் ஜெய நேற்று பிற்பகல் திடீரென்று மரணம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், ஜெயயின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வால்டாக்ஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்துபோக வைத்தனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீ ஸார் கூறும்போது, “ஜெயஸ்ரீயும், கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒரு நபரும் காதலித்துள்ளனர். இந் நிலையில் ஜெய வீட்டைவிட்டு வெளியேறி காதலனுடன் கள்ளக்குறிச்சிக்கு சென்றுள்ளார். அங்கு ஜெயயை தவறான முறை யில் சிலர் பயன்படுத்தியுள்ளனர். ஜெயஸ்ரீயின் பரிதாப நிலைமையை தெரிந்து கொண்ட ஒருவர், செல்போன் மூலம் அவரது தந்தையை தொடர்பு கொண்டு பேசியதைத் தொடர்ந்து அவர் மீட்கப்பட்டார். அவர் திடீரென்று எப்படி இறந்தார் என்பது குறித்து பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிவிக்க முடியும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x