Last Updated : 12 May, 2015 07:42 AM

 

Published : 12 May 2015 07:42 AM
Last Updated : 12 May 2015 07:42 AM

விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகளும் பணிச்சுமையால் அவதிப்படும் போலீஸும்

விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகளாலும், பணிச்சுமையால் அவதிப்படும் போலீஸாலும்தான் விபத்துகள் நடப்பதாக கூறப் படுகிறது.

சென்னை கே.கே.நகரில் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரை போக்குவரத்து போலீஸார் நிறுத்தச் சொல்லியும் அவர்கள் நிறுத்தாமல் சென்றதால், ஒரு போலீஸ்காரர் தனது லத்தியால் மோட்டார் சைக்கிள் ஓட்டியவரை தாக்க, நிலைதடுமாறி சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி செல்வம் என்ற இளைஞர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஒரு போலீஸ்காரரை பிடித்து அடித்து உதைத்தனர். எல்லா தவறுகளையும் போலீஸாரே செய்ததுபோல அந்த இடத்தில் நடந்த சம்பவங்கள் இருந்தன. போக்குவரத்து போலீஸார் துளியும் மனிதாபிமானம் இன்றி நடந்துகொண்டதாகவும் மக்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஏட்டு சிவானந்தம் மற்றும் காவல் ஆய்வாளர் சற்குணம் இருவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து போலீஸார் மத்தியிலும் குமுறல்கள் எழுந்துள்ளன.

இது குறித்து போக்குவரத்து போலீஸார் கூறியதாவது:

குறை சொல்வார்கள்

சாலை விதிகளை மீறி ஒரே மோட் டார் சைக்கிளில் 3 பேர் சென்றது யாருக்கும் தவறாக தெரிய வில்லை. போலீஸார் நிறுத்தச் சொல்லி சைகை காட்டியும் நிறுத் தாமல் தப்பிச் செல்ல முயன்ற தும் யாருக்கும் தவறாக தெரிய வில்லை. வாகனத்தின் எண்ணை குறித்து வைத்து, ஆர்டிஓ அலு வலகம் மூலம் முகவரியை வாங்கி நடவடிக்கை எடுத்திருக்கலாமே என்கின்றனர் சிலர். ஒரு வேளை 3 பேரும் ஏதாவது தவறு செய்துவிட்டு தப்பிச் செல் பவர்களாக இருந்திருந்தால்?. அல்லது இன்னும் பெரிய விபத்து ஏற்பட காரணமாக இருந்திருந்தால்? அப்போதும் போலீஸைதானே குறை கூறியிருப்பார்கள்.

விதிகளை மதிக்காதவர்கள்

சாலை விதிகளை மீறி செல்லும் ஒருவரை லத்தியால் அடிப்பதற்கு போலீஸாருக்கு நிச்சயம் அதிகாரம் இல்லை. இதனால் ஓர் உயிர் போய்விட்டது. இதற்கு நிச்சயம் அவர் வருந்தியாக வேண்டும். ஆனால் அவர் செய்த தவறுக்கு 25 சதவீதம் மட்டுமே அவர் பொறுப்பாவார். மற்ற அனைத்துக்கும் போக்குவரத்து காவலர்களுக்கு கொடுக்கப்படும் பணிச்சுமையும், சாலை விதி களை மதிக்காமல் செல்லும் பொதுமக்களும்தான் பொறுப்பு.

அதிக வேகத்தில் செல்லுதல், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அல்லது சீட் பெல்ட் அணியாமல் செல்லுதல், ஓட்டுநர் உரிமம்; இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், சாலை விதிகளை மதிக்காமல் செல்லு தல் என அத்தனை தவறு களையும் செய்பவர்கள்தான் இங்கு அதிகம்.

இவை அனைத்தையும் முறையாக பின்பற்றுபவர்களை போலீஸாரால் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் போலீஸாரை பார்த்து பயப்படுவதும் இல்லை.

12 மணி நேர வேலை

ஒவ்வொரு போலீஸ்காரரும் தினமும் கட்டாயமாக 12 மணி நேரம் பணி செய்தாக வேண்டும். மேலும், விஐபி பாதுகாப்பு அல்லது பிரச்சினைக்குரிய இடத்தில் பணி என்றால் இந்த நேரம் இன்னும் அதிகமாகிவிடும். சாலையில் சிக்னலில் நின்று போக்குவரத்தை சரிசெய்யும் போலீஸ்காரருக்கும் இதே நிலைதான். அவர்களால் இயற்கை உபாதைகளை கழிப் பதற்குக் கூட செல்ல முடியாது. அதற்கான வசதிகளும் அவர்கள் பணி செய்யும் இடத்தில் இருக்காது.

600 வாகனங்களுக்கு அபராதம்

வாகன சோதனையில் ஈடுபடும் போலீஸார் ஒரு நாளைக்கு 200 நான்கு சக்கர வாகனங்கள், 400 இரண்டு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்து மேல் அதிகாரிகளிடம் கணக்கு காட்ட வேண்டும். இது எழுதப்படாத அதிகாரிகள் சட்டம். அப்படி கணக்கு காட்டவில்லை என்றால் நீ எவ்வளவு லஞ்சம் வாங்கினாய் என்ற அடுத்த கேள்வி வரும். இதற்காக போக்குவரத்து போலீஸார் படும் அவதிகள் அதிகம். அந்த கோபத்தை வாகன ஓட்டிகளிடமும் காட்டுவார்கள்.

தீர்வு என்ன?

போலீஸாரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல். 8 மணி நேர வேலை. வார விடுமுறை. பொதுமக்களிடம் நடந்துகொள்ள வேண்டிய முறை குறித்து அவ்வப்போது ஞாபகப்படுத்துதல் இந்த நான்கையும் செய்தால் பெரும் பாலான போலீஸ் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்" என்றனர்.

லஞ்சம் வாங்குவது?

போக்குவரத்து போலீஸ்காரர் களில் பெரும்பாலானவர்கள் லஞ்சம் வாங்குகிறீர்களே. இதை தினமும் நாங்கள் பார்க்கிறோமே என்று கேட்டதற்கு, “சாலை விதிகளை மதித்து, முறையான ஆவணங்களுடன் செல்பவர்கள் எங்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. எப்படி பார்த்தாலும் லஞ்சத்தை நியாயப்படுத்த முடியாது தவறுதான்.

ஆனால் நாங்கள் வாங்கும் லஞ்சம் எங்களுக்கு மட்டுமல்ல மேலதிகாரிகளுக்கும் பங்கு கொடுக்கனும். நாங்கள் வாங்கா விட்டால்கூட அவர்கள் எங் களிடம் கேட்பார்கள். அதிக பணத்தாசையே லஞ்சத்துக்கு காரணம். முடிந்தவரை திருந்தப் பார்க்கிறோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x