Published : 30 Jun 2017 08:04 AM
Last Updated : 30 Jun 2017 08:04 AM

‘வருவான்டி தருவான்டி மலையாண்டி’ பாடிய பழம்பெரும் பாடகி சூலமங்கலம் ஜெயலட்சுமி மறைவு

பழம்பெரும் பாடகி சூலமங்கலம் ஜெயலட்சுமி நேற்று முன்தினம் நள்ளிரவு மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 85.

‘சூலமங்கலம் சகோதரிகள்’ என்று அழைக்கப்பட்ட ஜெயலட்சுமி, ராஜலட்சுமி, சரஸ்வதி சகோதரிகளில் இவர் மூத்தவர். கர்நாடக இசை, கந்த சஷ்டி கவசம் உள்ளிட்ட இசையில் தனித்த ஆளுமை செலுத்தியவர்.

மறைந்த சூலமங்கலம் ஜெயலட்சுமி ‘அரசிளங்குமரி’, ‘இந்திரா என் செல்வம்’, ‘தெய்வம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடல்களை பாடியவர். சூலமங்கலம் சகோதரிகளான ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகி யோர் இணைந்து ‘தெய்வம்’ படத் தில் பாடிய ‘வருவான்டி தரு வான்டி மலையாண்டி; பழனி மலையாண்டி’ பாடல் இவர் களுக்கு புகழை பெற்றுத்தந்தது.

தஞ்சாவூர் அருகே உள்ள சூலமங்கலத்தை சேர்ந்த ராமசாமி ஐயர், ஜானகி அம்மாள் இருவருக்கும் மகளாக பிறந்த ஜெயலட்சுமிக்கு குழந்தைகள் இல்லை. கணவரும் உயிருடன் இல்லை. இறுதிக் காலங்களில் தனது சகோதரி ராஜலட்சுமியின் மகன் முரளி குடும்பத்தினரோடு வசித்து வந்திருக்கிறார்.

நேற்று முன்தினம் இரவு ஜெயலட்சுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் காலமானார். மறைந்த ஜெயலட்சுமியின் உடல் அவரது விருப்பப்படி சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x