Published : 22 Dec 2016 08:36 AM
Last Updated : 22 Dec 2016 08:36 AM

வருமான வரித்துறை சோதனைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு: தமிழக போலீஸாரிடம் அனுமதி பெறவில்லை

சென்னை அண்ணாநகரில் உள்ள பி.ராமமோகன ராவ் வீட்டில் காலை 5.13 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். மதியம் 12 மணியளவில் மத்திய ஆயுதப்படை போலீஸார் (சி.ஆர்.பி.எப்) 20 பேர் திடீரென ராமமோகன ராவின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வீட்டை சுற்றி நின்று கொண்டு துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிஆர்பிஎப் டிஎஸ்பி மன்சூர்கான் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதேபோல தலைமைச் செய லகத்தில் நடத்தப்பட்ட சோதனை யிலும் மத்திய ஆயுதப்படை போலீ ஸாரே பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டனர். சோதனை நடத்தப்பட்ட 14 இடங்களிலும் மத்திய ஆயுதப் படை போலீஸாரே பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி யிடம் கேட்டபோது, "தமிழக போலீஸார் அனைவரும் தலை மைச் செயலாளர் ராமமோகன ராவின் கட்டுப்பாட்டில் வந்து விடுவார்கள். எனவே, அவரது வீட்டிலேயே சோதனை நடத்தும் போது தமிழக போலீஸாரின் பாதுகாப்பை அதிகாரிகள் நம்பவில்லை.

சோதனை முடிவில் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப் பற்றிய ஆவணங்களை வெளியே எடுத்துச் செல்லும்போது, வீட்டுக்கு வெளியே நிற்கும் நபர் கள் ஆவணங்களை அபகரிக் கவோ, அழிக்கவோ முயற்சிக் கலாம். இதை தடுக்கவும், வரு மான வரித்துறை அதிகாரிகள் தங் களது பாதுகாப்புக்காகவும் மத்திய போலீஸ் படையை வரவழைத்துள் ளனர்" என்று கூறினர்.

மத்திய போலீஸ் படை யினர் ஒரு மாநிலத்தில் வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவ தற்கு அந்த மாநில டிஜிபி அலுவலகம் அனுமதி கொடுக்க வேண்டும். ஆனால், தமிழக போலீஸாரிடம் எந்த அனுமதியும் கேட்காமல் மத்திய ஆயுதப்படை போலீஸார் தமிழகத்தில் பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x