Published : 14 Jun 2014 09:10 AM
Last Updated : 14 Jun 2014 09:10 AM

வண்டலூர் அப்துர் ரஹ்மான் பல்கலையில் ‘இளம் மேதை’

மிகக்குறைந்த வயதில் எம்.சி.ஏ. படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர், பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் எம்.டெக். பிஹெச்.டி. படிப்பில் சேர்ந்துள்ளார்.

முகமது சுஹைல் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் படித்து தனது 17-வது வயதிலேயே எம்.சி.ஏ. (மாஸ்டர்ஸ் இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்) படித்து 78.5 சதவீத மதிப்பெண் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மதிப்புமிக்க எம்.சி.டி.எஸ். மற்றும் எம்.சி.பி.டி. ஆகிய சான்றிதழ் தேர்வுகளிலும் வெற்றிபெற்று உலகிலேயே மிக இளம் வயதில் இத்தேர்வுகளில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவரை தங்கள் நிறுவனத்தில் பணியில் சேர்த்துக்கொள்ள உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. ஆனால் சுஹைல் எந்த நிறுவனத்திலும் பணியில் சேராமல் சென்னை வண்டலூரில் உள்ள பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., பிஹெச்.டி. என்ற ஒருங்கிணைந்த படிப்பில் சேர்ந்துள்ளார்.

இவருக்கு இலவச உணவு, தங்கும் வசதி ஆகியவற்றுடன் படிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x