Published : 25 Jun 2017 01:25 PM
Last Updated : 25 Jun 2017 01:25 PM

ரஜினி அரசியலுக்கு வரவேண்டிய கட்டாயத்தை மற்றவர்கள் ஏற்படுத்துகிறார்கள்: ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி கருத்து

ரஜினி அரசியலுக்கு வரவேண்டிய கட்டாயத்தை மற்றவர்கள் ஏற் படுத்துகிறார்கள் என்று ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தெரி வித்துள்ளார்.

ஃப்ரீமேசன் அமைப்பின் சென்னை பகுதி சார்பில் உலக சகோதரத்துவ தின நிறைவு விழா, எழும்பூரில் உள்ள ஃப்ரீமேசன் அரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குரு மூர்த்தி பங்கேற்று பேசியதாவது:

உலக நாடுகளில் வளம்மிக்க நாடாக பல நூற்றாண்டுகளாக இந்தியா விளங்கி வந்துள்ளது. 18-ம் நூற்றாண்டு வரை இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி, மொத்த உலக நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி அளவுக்கு இணையாக இருந்தது. 18-ம் நூற்றாண்டுக்கு பின்னரே, குறையத் தொடங்கியது. இந்தியாவின் பலமே, மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் நிலவும் வேற்றுமை கள் தான். அதையும் மீறி, நாட்டின் வளர்ச்சி என்று வரும்போது, ஒன்று படுவதுதான் நமது சிறப்பு. கடந்த காலங்களில் உலக அளவில் இந்தியா கோலோச்சியது குறித்து, இன்றைய தலைமுறையினருக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். சகோதரத்துவம் என்பது நாம் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள் வதில்தான் இருக்கிறது. குறிப்பாக ஒவ்வொருவரிடம் இருக்கும் வேற்றுமையை புரிந்துகொண்டால் சகோதரத்துவம் தழைக்கும் என் றார்.

நிகழ்ச்சியில், ராமகிருஷ்ண மடத்தின் ‘வேதாந்த கேசரி’ இதழின் ஆசிரியர் சுவாமி மகாமேதானந்தா, ஃப்ரீமேசன் அமைப்பின் தென்னிந் திய கிரான்ட் மாஸ்ட்ர் இப்ராஹிம் மார்கோஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் எஸ்.குருமூர்த்தி நிருபர் களிடம் கூறியதாவது:

பிரிப்பதில் நாம் ருசி கண்ட வர்கள். நாம் எதையும் ஒன்றாக பார்க்க மாட்டோம். குடியரசுத் தலை வர் வேட்பாளர் தேர்வில், தலித் வேட்பாளர்களை, இவர் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த தலித், இவர் குறிப்பிட்ட சிந்தனையுள்ள தலித் என பிரித்துப் பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுக்குப் பின், அது குறித்து கருத்து தெரிவிப்பேன்.

அதிமுகவை பொறுத்தவரை, அக்கட்சி பலம் அடைய ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது. அவர்கள் இன்னும் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்றால், எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், அவர்களுக்கு ஏற்கெனவே இருந்த பலம் கிடைக்காவிட்டாலும், 4 ஆண்டுகள் ஆட்சியை தொடர்வதற்கான பலமாவது கிடைக்கும்.

அந்த அளவுக்கு சிந்தனையும், திறனும், எல்லோருக்கும் தலைமை தாங்கும் நபரும் அக்கட்சியில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதிமுக வில் குழப்பம் தொடரும் என்றே நான் கருதுகிறேன்.

சொத்து மட்டும்தான் எங்க ளுக்கு தேவை என்று கூறி, அரசிய லில் இருந்து தீபா விலகினால், அது அவர்களுக்கும் நல்லது, அரசி யலுக்கும் நல்லது. அவர் தன்னை ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்று கூறுவதை கேட்கும்போது கஷ்டமாக உள்ளது. ஜெயலலிதா வின் சொத்துக்கு சட்டப்படி அவர் வாரிசாக இருக்கலாம். ஜெயலலிதாவின் அரசியல் வாரி சாக அவர் வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

ரஜினி அரசியலுக்கு வர இருப்பது தொடர்பாக, அவரிடம் நிருபர்கள் கருத்து கேட்டபோது, ரஜினி அரசியலுக்கு வர வேண் டிய கட்டாயத்தை மற்றவர்கள் ஏற்படுத்திக்கொண்டு இருக்கி றார்கள் என்றே தோன்றுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x