Published : 15 Jun 2016 08:56 AM
Last Updated : 15 Jun 2016 08:56 AM

முதல்வர் ஜெயலலிதாவின் வேண்டுகோள் ஏற்பு: தமிழகத்தின் கோரிக்கைகளை விரைவாக கவனிக்க சிறப்பு குழு-பிரதமர் நரேந்திர மோடி உறுதி

முதல்வர் ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்று, தமிழகத்தின் கோரிக்கைகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க தமது அலுவலகத்திலேயே சிறப்புக் குழு அமைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள் ளார்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. முதல்வ ராக கடந்த மே 23-ம் தேதி ஜெய லலிதா பதவியேற்றார். அவருக்கு மோடி அழைப்பு விடுத்தார். இதை ஏற்று, முதல்வர் ஜெயலலிதா நேற்று காலை 11 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டார். அவருடன் தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் சென்றனர். விமான நிலையத்தில் அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் ஆட்சியர் கஜலட்சுமி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். பிற்பகல் 2 மணிக்கு அவர் டெல்லி சென்றடைந்தார்.

டெல்லி விமான நிலையத்தில் முதல் வரை, மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை மற்றும் அதிமுக எம்பிக்கள் வரவேற்றனர் . பின்னர் தமிழ்நாடு இல்லம் வந்த அவருக்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரர்கள் அணி வகுப் பு மரியாதை அளித்தனர்.

அங்கு ஓய்வெடுத்த முதல்வர் மாலை 4.30 மணிக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் இல்லத்துக்குச் சென்றார். மாலை 4.45-க்கு இருவரும் சந்தித்தனர். அப்போது பேரவை தேர்தல் வெற்றிக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, 29 மிக முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் அளித்தார்.

29 கோரிக்கைகள்

பிரதமரிடம் அளித்த 34 பக்க மனுவில் முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தின் உரிமை பிரச்சினை கள், தமிழக திட்டங்களுக்கான அனுமதி, நிதித்தேவை தொ டர் பான கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு அமைக்க வேண்டும். கர்நாடகாவின் மேகேதாட்டு திட்டத்தை தடுக்க வேண்டும். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும். கச்சத்தீவை மீட்பதுடன், அங்குள்ள அந்தோணி யார் தேவாலயத்தை தமிழக மீன வர்கள் பங்களிப்புடன் கட்ட வேண்டும். மீனவர்களை பழங்குடி யினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

கூடங்குளம் இரண்டாவது அலகில் மின் உற்பத்தியை தொடங்க வேண்டும். செய்யூர் மின் திட்டத்தை விரைவில் செயல் படுத்த வேண்டும். 13-வது நிதி ஆணைய ஒதுக்கீட்டில் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். கடந்த ஆண்டு சென்னை உட்பட தமிழக வட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.25 ஆயிரத்து 912 கோடி கோரப்பட்டது.

அதில் ரூ.1,737.65 கோடி மட்டுமே விடுவிக்கப் பட்டது. மீதமுள்ள தொகையை விரைவில் விடுவிக்க வேண்டும். நீர்நிலைகள், ஆற்றங்கரை ஓரங்க ளில் வசித்த மக்களுக்கு வீடுகள் கட்டித்தர தேவையான நிதி ஒதுக்க வேண்டும்.

கெயில் நிறுவன எரிவாயு குழாய்களை மாற்றுப்பாதை யில் பதிக்க வேண்டும். தமி ழகத்துக்கு மண்ணெண்ணெய் கூடுதலாக ஒதுக்க வேண்டும். காவல்துறை நவீனமயமாக்கும் திட்டத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள், மேம்பால ரயில், மெட்ரோ ரயில் இணைப்பு பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்.

மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதுடன், அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 345 இடங்களுக்கு மத்திய அரசு நிதி அளிக்க வேண்டும். தமிழகம் கோரிய இடத்தில் எய்ம்ஸ் மருத் துவமனை அமைக்க வேண்டும். அனைவருக்கும் கல்வித்திட்டம், கல்வி உரிமைச் சட்டங்களின் கீழ் தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள தொகைகளை விடுவிக்க வேண்டும்.

அரசு கேபிளுக்கான டிஜிட்டல் உரிமத்தை வழங்க வேண்டும். தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும். மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க அனுமதிக்க வேண்டும். இதுபோன்ற 29 கோரிக்கைகள் அந்த மனுவில் இடம் பெற்றிருந்தன.

பிரதமர் உறுதி

கோரிக்கைகள் மீது சிறப்பு கவனம் செலுத்துவதுடன் தமிழகம் தொடர்பான விவகாரங்களுக்கு விரைவாக தீர்வு காண சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என அப்போது முதல்வர் பிரதமரை கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த அவர், ‘தன் அலுவலகத்திலேயே சிறப்புக் குழுவை அமைத்து, சம்பந்தப் பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடம் ஆலோசித்து, விரைவாக நடவடிக்கை எடுக்கப் படும்’ என ஜெயலலிதாவிடம் உறுதியளித்தார்.

சுமார் 50 நிமிடங்கள் வரை நடந்த இந்த சந்திப்பு, மாலை 5.45 மணிக்கு நிறைவடைந்த து. பின்னர் முதல்வர் மீண்டும் தமிழ்நாடு இல்லம் திரும்பினார். அங்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ் ணன் ஆகியோர் முதல்வரை சந்தித்துப் பேசினர்.

இதுதவிர, டெல்லி தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் என். கண்ணன், முன்னாள் பொதுச் செ யலாளர் முகுந்தன் ஆகியோ ரும் முதல்வரை சந்தித்து தேர்தல் வெற் றிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இரவு 7 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதா, இரவு 9.30 மணிக்கு சென்னை வந்தடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x