Published : 02 Nov 2014 04:01 PM
Last Updated : 02 Nov 2014 04:01 PM

மீனவர்கள் 5 பேருக்காக வாதிட வழக்கறிஞர் நியமனம்: தமிழிசை தகவல்

ராமேஸ்வரம் மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ள மத்திய அரசு, அவர்களுக்காக வாதிட வழக்கறிஞரை நியமித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட தகவலில், "5 மீனவர்களுக்காக வாதாடுவதற்கு இலங்கையின் தலைசிறந்த வழக்கறிஞரை இந்திய தூதரகம் நியமித்துள்ளது.

மரண தண்டனையை விதிக்கப்பட்டுள்ள 5 தமிழ் மீனவரை காப்பாற்ற இலங்கை நிதிமன்றத்தின் தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன் திங்கள்கிழமை இலங்கை உயர் நிதிமன்றதில் மேல்முறையீடு செய்யப்படும் என்று இலங்கை அதிபரின் உயர்மட்ட சட்ட ஆலோசகர்களின் ஒருவராக அனில் சில்வாவை தமிழ் மீனவர்களுக்கு வாதாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஆணையை இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியுறவுத் துறை மின்னஞ்சல் முலமும் தொலைபேசியிலும் தெரிவிக்கபட்டுள்ளது

ராமேஸ்வரம் 5 மீனவர்கள் தூக்கு தண்டனையில் இருந்து காக்கப்படுவது உறுதி என்று அனில்சில்வா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏனெனில், ஜிபிஎஸ் எனப்படும் தொலைதுறை தகவலை பதிவுகருவியில் பதிவான ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் படகுகள் குற்றம்சாட்டப்பட்ட பகுதியில் சென்றதாக பதிவாகவில்லை என்பதும், அதேபோல் இலங்கை கடற்படை படகும் அந்தப் பகுதியில் அதேநேரத்தில் செல்லவில்லை என்பதனை சுட்டிகாட்டிவுள்ளதை ஆறுதல் அளிக்கும் சான்று.

இந்த போதைபொருள் கடத்தல் நவம்பர் 2011-ல் டெல்ப்ட் தீவுக்கருகில் நடந்தாக கூறப்படும் இடத்தில தமிழக மீனவர்களின் படகுகள் சென்றதாக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது

இதே நேரத்தில் சென்ற வெள்ளிகிழமை வட இலங்கை மாகாணத்தின் மீனவர்கள் குருநகர் ஜாபரை அருகில் இதேபோன்று போதைபொருள் கடத்துவதாக 3 இலங்கை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை பொய்க் குற்றம் சுமத்தியுள்ளதாக ஆர்ப்பாட்டம் செய்துள்ளதும் இந்த வழக்கிற்கு வலு சேர்த்துள்ளது .

இலங்கை மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து சட்டபூர்வமாகவும், ராஜிய தூதரக உறவுகள் மூலமாகவும் எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசு அக்கறையுடன் எடுத்து வருகிறது.

எனவே, மீனவ சகோதரர்கள் உண்ணாவிரதம் போராட்டங்களால் தங்களை வருத்திக்கொள்வதை நிறுத்திக்கொண்டு இதை அரசியலாக்கி குளிர்காய நினைக்கும் சக்திகளுக்கு துணை போகாமல் மத்திய அரசின் முயற்சிகளை புரிந்துகொண்டு போராட்டங்களை நிறுத்தவேண்டும் என வேண்டுகிறோம்" என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x