Published : 23 Nov 2016 08:05 AM
Last Updated : 23 Nov 2016 08:05 AM

மீண்டும் ஸ்தம்பித்தன வங்கி ஏடிஎம்கள்: பணம் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு

சென்னையில் உள்ள பெரும்பா லான வங்கி ஏடிஎம்-கள் நேற்று பணம் இன்றி ஸ்தம்பித்தன. இத னால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் பெரிதும் தவித்தனர்.

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல் லாது என மத்திய அரசு அறிவித் ததையடுத்து, மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டு களை மாற்றிக்கொள்ள வங்கி களுக்கு படையெடுத்து வரு கின்றனர்.

அறிவிப்பு வெளியான சில நாட்களுக்கு புதிய 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் இயந்திரம் மூலம் வழங்க முடி யாமல், 100 ரூபாய் நோட்டுகள் மட் டும் வழங்கப்பட்டன. 100 ரூபாய் நோட்டு பற்றாக்குறையால் பல ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பட வில்லை. புதிய ரூபாய் நோட்டு களை தடையில்லாமல் அனைத்து ஏடிஎம்களிலும் வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது பல ஏடிஎம்களில் ரூ.100, ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வழங்கப்படுகின்றன. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை கிடைப்பதில் சிரமம் இருந்தாலும் பொதுமக்கள் அவற்றை ஏடிஎம்-களில் இருந்து எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில், நேற்று மீண்டும் ஏடிஎம் மையங்களில் பணத்தட் டுப்பாடு ஏற்பட்டது. ராயப்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாசாலை, பாரிமுனை உள்ளிட்ட இடங்களில் ஏடிஎம் மையங்கள் பணம் இன்றி மூடப்பட்டிருந்தன.

இதுகுறித்து, அண்ணா சாலை யில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த தனியார் நிறுவன ஊழி யர் பாலகிருஷ்ணன் கூறும்போது, “500, 1000 ரூபாய் நோட்டுகள் செல் லாது என பிரதமர் அறிவித்த பிறகு ஏடிஎம்கள் 2 நாள் மூடப்பட்டன. அதன் பிறகு திறக்கப்பட்ட ஓரிரு நாட்கள் ஏடிஎம்களில் பணம் இல்லாமல் தவித்தோம். அதன் பிறகு 100 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டன. இந்நிலையில், இன்று (நேற்று) மீண்டும் பல ஏடிஎம்கள் பணம் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. திறக்கப்பட்டுள்ள ஒரு சில ஏடிஎம்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். பலர் பணம் எடுக்க முடியாமல் திரும்பிச் செல்கின்றனர்’ என்றார்.

இதுகுறித்து, பாரிமுனையில் உள்ள பொதுத்துறை வங்கி மேலா ளர் ஒருவர் கூறும்போது, “வங்கி களில் 100 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. இதனால் வாடிக்கை யாளர்கள் அனைவருக்கும் முழு அளவில் பணம் வழங்க முடிய வில்லை. அதேபோல், ஏடிஎம்களி லும் பணம் நிரப்ப முடியவில்லை. ரிசர்வ் வங்கியில் இருந்து அதிகளவு பணம் வந்தால்தான் இத்தட்டுப்பாடு நீங்கும்” என்றார்.

சென்னை நகரம் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் பெரும் பாலான ஏடிஎம்கள் பணம் இல்லாத தால் மூடப்பட்டிருந்தன. சில வங்கி களில் பணம் டெபாசிட் மட்டுமே பெறப்பட்டது. இதனால் வாடிக்கை யாளர்களுக்கும், வங்கி ஊழியர் களுக்கும் இடையே வாக்கு வாதங்கள் ஏற்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x