Published : 22 Jun 2015 07:24 AM
Last Updated : 22 Jun 2015 07:24 AM

மாடம்பாக்கத்தில் வயதான தம்பதி வீட்டில் இருந்த 3 பெண் குழந்தைகள் மீட்பு

மாடம்பாக்கத்தில் வயதான தம்பதியின் வீட்டில் இருந்த 3 பெண் குழந்தைகள் மீட்கப் பட்டனர்.

சென்னை அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த வயதான தம்பதி சிமோன் - கனகஜாய். இவர்கள் தங்கள் வீட்டில் மூன்று பெண் குழந்தை களை வளர்த்து வருவதாக, குழந்தைகள் நலக் குழுமத் துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் மணிகண் டன், உறுப்பினர் ஜகிருதீன் மற்றும் சமூக நலத்துறை அலுவலர் சற்குணம் ஆகியோ ரைக் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் சம்பந்தப் பட்ட வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

உரிய ஆவணங்கள் இல் லாமல் அவர்கள் வைத்திருந்த 3 பெண் குழந்தைகளையும் மீட்டனர். அதன்பின் மணப் பாக்கத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற இல்லத்தில் அந்த குழந்தைகளை ஒப்ப டைத்தனர்.

இதுபற்றி வயதான தம்பதியரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின் றனர்.

இதுதொடர்பாக காஞ்சி புரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தின் உறுப்பினர் ஜகிருதீன் கூறியதாவது:

வயதான தம்பதியரிடம் விசாரணை நடத்தியதில், பெற் றோர் வெளிநாட்டில் இருப்ப தால் தங்களிடம் குழந்தை களை பார்க்கச் சொல்லி விட்டுச் சென்றதாக முதலில் தெரிவித்தனர். அதன்பின் குழந்தைகளின் பெற்றோர் மதுரையில் இருப்பதாகவும், அந்த குழந்தைகள் தங்களின் பேத்திகள் என்றும் கூறினர்.

இதைத் தொடர்ந்து அவர் களிடமிருந்து குழந்தைகளை மீட்டோம். மீட்கப்பட்ட குழந் தைகளின் வயது 3 வயதுக் குள்தான் இருக்கும். இந்த தம்பதியின் மகள் ஜெயாவின் கணவர் ரஷல்ராஜ் என்பவர், அப்பகுதியில் குழந்தைகள் இல்லம் நடத்தி வருகிறார்.

அந்த இல்லத்தில் பல ஆண்டுகளாக 9 பெண் குழந் தைகள் மட்டுமே உள்ளன. அந்த குழந்தைகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. ஆனால், அவர் கள் நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளதால், குழந்தை களை மீட்க முடிய வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x