Published : 14 Apr 2016 07:05 PM
Last Updated : 14 Apr 2016 07:05 PM

தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணியினர் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு



ஆர்.கே.நகரில் விசிக, திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டி

தேமுதிக மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணிக்கான தொகுதிப் பட்டியல் வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்டது. ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகரில் விடுதலைச் சிறுத்தைகளும், கருணாநிதி எதிர்த்து திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகின்றன.

தேமுதிக - ம.ந. கூட்டணி தமாகா அணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

தேமுதிக -104

கும்மிடிப்பூண்டி, திருத்தணி, அம்பத்தூர், திருவொற்றியூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), சேப்பாக்கம் திருவல்லிக் கேணி, விருகம்பாக்கம், தியாகராய நகர், வேளச்சேரி, ஆலந்தூர், தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம், சோளிங்கர், ராணிப்பேட்டை, கே.வி.குப்பம் (தனி), ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத் தூர், வேப்பனஹள்ளி, ஓசூர், பாலக் கோடு, தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, செங்கம் (தனி), திருவண்ணாமலை, கலசப்பாக்கம், ஆரணி, செய்யாறு, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி), ஏற்காடு (எஸ்டி), ஓமலூர், மேட்டூர், சேலம் மேற்கு, சேந்தமங்கலம் (எஸ்டி), பரமத்தி வேலூர், திருச் செங்கோடு, குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், பவானி, அந்தியூர், உதகமண்டலம், குன்னூர், சூலூர், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப் பேட்டை, நிலக்கோட்டை (தனி), நத்தம், வேடசந்தூர், கரூர், குளித்தலை, மணப்பாறை, திருச்சி மேற்கு, திருவெறும் பூர், மண்ணச்சநல்லூர், பெரம்பலூர் (தனி), அரியலூர், திட்டக்குடி (தனி), விருதாச்சலம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சீர்காழி (தனி), மயிலாடுதுறை, வேதாரண்யம். கும்பகோணம், தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, மதுரை வடக்கு, மதுரை மத்தி, திருமங்கலம், ஆண்டிப்பட்டி, போடிநாயக்கனூர், சிவகாசி, விருதுநகர், திருச்சுழி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம் (தனி), கடையநல்லூர், ஆலங்குளம், திருநெல்வேலி, நாங்குனேரி, ராதாபுரம், கன்னியாகுமரி, பத்மநாபபுரம் ஆகிய 104 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது.

மதிமுக - 29

பூந்தமல்லி, ஆவடி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், பல்லா வரம், திருப்போரூர், ஆற்காடு, செஞ்சி, ஈரோடு மேற்கு, தாராபுரம், பல்லடம், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, அரவக் குறிச்சி, திருச்சி கிழக்கு, ஜெயங்கொண்டம், மன்னார்குடி, ஆலங்குடி, காரைக்குடி, மதுரை தெற்கு, உசிலம்பட்டி, சாத்தூர், தூத்துக்குடி, கோவில்பட்டி, சங்கரன்கோவில், நாகர்கோவில், பாளையங்கோட்டை, குளச்சல் ஆகிய 29 தொகுதிகள் மதிமுகவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தமாகா - 26

ராயபுரம், மயிலாப்பூர், காட்பாடி, அணைக்கட்டு, வாணியம்பாடி, பர்கூர், கிருஷ்ணகிரி, திருக்கோவிலூர், சங்க கிரி, சேலம் வடக்கு, நாமக்கல், பெருந் துறை, மேட்டுப்பாளையம், மடத்துக் குளம், கிருஷ்ணராயபுரம் (தனி), முசிறி, கடலூர், பூம்புகார், பாபநாசம், திருமயம், மேலூர், கம்பம், விளாத்திகுளம், வைகுண்டம், தென்காசி, கிள்ளியூர் ஆகிய 26 தொகுதிகளில் தமாகா போட்டியிட உள்ளது

விடுதலை சிறுத்தை - 25

பொன்னேரி (தனி), திருவள்ளூர், ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர் (தனி), சோழிங்கநல்லூர், பெரும்புதூர் (தனி), செய்யூர் (தனி), அரக் கோணம் (தனி), வேலூர், ஊத்தங்கரை (தனி), வந்தவாசி (தனி), மயிலம், திண்டி வனம் (தனி), வானூர் (தனி), சேலம் தெற்கு, ராசிபுரம் (தனி), ஆத்தூர் (தனி), துறையூர் (எஸ்டி), குன்னம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் (தனி), திருவிடைமருதூர் (தனி), மானாமதுரை (தனி), சோழவந்தான் (தனி), பரமக்குடி (தனி) ஆகிய 25 தொகுதிகள் விசிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 25

மதுரவாயல், பெரம்பூர், அரூர் (தனி), போளூர், விக்கிரவாண்டி, எடப்பாடி, கோபிசெட்டிபாளையம், கூடலூர் (தனி), திருப்பூர் தெற்கு, கவுண்டம்பாளையம், கோவை தெற்கு, பழநி, திண்டுக்கல், லால்குடி, நெய் வேலி, சிதம்பரம் , கீழ்வேளூர் (தனி), நன்னிலம், திருவையாறு, கந்தர்வக்கோட்டை (தனி), மதுரை மேற்கு, பெரியகுளம் (தனி), ராஜபாளையம், அம்பாசமுத்திரம், விளவங்கோடு ஆகிய தொகுதிகள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் - 25

மாதவரம், சைதாப்பேட்டை, குடியாத்தம் (தனி), தளி, பென்னாகரம், கீழ்பென்னாத்தூர், வீரபாண்டி, பவானிசாகர் (தனி), அவினாசி (தனி), திருப்பூர் வடக்கு, வால்பாறை (தனி), ஒட்டன்சத்திரம், ஸ்ரீரங்கம், நாகப்பட்டினம், திருத்துறைப் பூண்டி (தனி), திருவாரூர், பேரா வூரணி, அறந்தாங்கி, திருப்பத் தூர், சிவகங்கை, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், வில்லி புத்தூர் (தனி), அருப்புக் கோட்டை வாசுதேவநல்லூர் (தனி) ஆகிய 25 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது.

தேமுதிக தரப்பில் 75 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் புதன்கிழமை இரவு அறிவிக்கப்பட்டனர். விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வரும் 17, 18 தேதிகளில் அறிவிக்கப்படும் என அக்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x