Published : 13 Apr 2015 09:03 AM
Last Updated : 13 Apr 2015 09:03 AM

போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை: பாமக மகளிர் அணி துணை தலைவி உட்பட 3 பேர் கைது- மேலும் பலருக்கு வலை

பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப் பட்டனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் தட்சிணாமூர்த்தி சென்னை உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், ‘‘வழக்கறிஞர்களாக பணி புரிவதற்கு பார் கவுன்சிலில் பதிவு செய்வதற்காக பலர் விண்ணப்பம் கொடுத்திருந்தனர். அவற்றை ஆய்வு செய்தபோது, சென்னையை சேர்ந்த அருண் குமார் மற்றும் அழகிரி, மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் போலியான எல்எல்பி சான்றிதழ்களை கொடுத்திருப்பது தெரிந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

புகாரின்பேரில் காவல் உதவி ஆணையர் கண்ணன், ஆய்வாளர் கீதா மற்றும் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

போலி சான்றிதழ் கொடுத்த 3 பேரிடமும் நடத்தப்பட்ட விசா ரணையில் அவர்கள் ஒரே நபரிட மிருந்து போலியான சான்றிதழ் களை பெற்றிருப்பது தெரிந்தது. ஒரு பத்திரிகையில் வந்த விளம் பரத்தை பார்த்து அதில் இருந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, கோவை மாவட்டம் காந்திபுரம் 3-வது தெருவில் ‘ஹை மார்க்' என்ற பெயரில் ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தி வரும் சண்முகசுந்தரி(32) என்பவர் பேசியிருக்கிறார். அவரை கோவைக்கே சென்று நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.

அப்போது சண்முகசுந்தரி, வகுப் புக்கே வர வேண்டாம். தேர்வு எழுத வேண்டாம். பணம் கொடுத் தால் எல்எல்பி படித்து முடித்ததற் கான சான்றிதழை வாங்கித் கொடுப்பதாக கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வரும் தலா ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்துள்ளனர். அதை பெற்றுக்கொண்ட சண்முகசுந்தரி, உத்தரப்பிரதேச மாநிலம் பந்தல்கண்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து கொடுக்கப்பட்டது போல எல்எல்பி சான்றிதழை போலியாக தயாரித்து கொடுத்துள்ளார்.

அதைத் தொடர்ந்து சண்முகசுந் தரியிடம் நடத்தப்பட்ட விசாரணை யில், அவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி துணைத் தலைவராக இருப்பது தெரிந்தது. இவர் தமிழ்நாடு முழு வதும் பல இடங்களில் கிளை களை வைத்து இதேபோல பல ருக்கு போலி சான்றிதழ்களை கொடுத்திருப்பதும் தெரியவந்தது. போலி சான்றிதழ்கள் தயாரிப்பதற் காக சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையை சேர்ந்த அருண் குமார்(36), சேலம் குரங்கு சாவடி நரசோதிபட்டி பகுதியை சேர்ந்த கணேஷ்பிரபு(28) ஆகி யோர் உதவி செய்திருப்பதும் தெரிந்தது.

இவர்கள் 3 பேரும் சேர்ந்து பலருக்கு போலியான சான்றிதழ் களை தயார் செய்து கொடுத்து, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித் துள்ளனர். சட்டம், பொறியியல், பி.எஸ்சி., பி.ஏ., பி.காம்., டிப்ளமோ என பல போலி சான்றிதழ்களை தயாரித்து அதன் தகுதிக்கு ஏற்ப ரூ.50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை விற்பனை செய்து உள்ளனர்.

அவர்களிடமிருந்து லக்னோ, டெல்லி, கான்பூர், மேகாலயா என பல இடங்களில் உள்ள பல்கலைக்கழக போலி சான் றிதழ்களும், அவற்றை தயா ரிப்பதற்கான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதைத் தொடர்ந்து சண்முக சுந்தரி, அருண்குமார், கணேஷ்பிரபு ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்துவிட்டோம்.

போலி சான்றிதழ்கள் தயா ரிப்பு மோசடியில் மேலும் பலருக்கு தொடர்புள்ளது. இவர் களிடம் போலி சான்றிதழ்கள் வாங்கியவர்கள் குறித்த தகவ லையும் திரட்டி வருகிறோம். அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x