Published : 15 Jul 2017 10:07 AM
Last Updated : 15 Jul 2017 10:07 AM

போலியோவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் இதய ரத்தக்குழாய் அடைப்பை நீக்கி ஸ்டென்ட் பொருத்தம்: முதல்முறையாக ஸ்டான்லி மருத்துவமனை சாதனை

இந்தியாவில் முதல்முறையாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் போலியோவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் இதய ரத்தக்குழாய் அடைப்பை சரிசெய்து ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.

காரைக்கால் பகுதியைச் சேர்ந்த வர் ரத்தினசபாபதி. ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரது மகள் கலைச்செல்வி (42). ஒரு வயதாக இருக்கும்போது போலியோவால் பாதிக்கப்பட்டு இவரது வலது கையும், வலது காலும் செய லிழந்தது. 38-வது வயதில் சிறு நீரகங்கள் செயலிழந்தன. தொடர்ந்து 4 ஆண்டுகளாக ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது. இடது கண் மற்றும் கை வீங்கியது. இதனால் ரத்த சுத்திகரிப்பும் செய்ய முடியாத நிலைமை ஏற் பட்டது. இதைத்தொடர்ந்து ராய புரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் ரத்தநாள அறுவைச் சிகிச்சைத் துறையில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவரது இதயத்தின் அருகே ரத்தக்குழாயில் 100 சதவீதம் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து துறையின் தலைவர் டாக்டர் க.துளசிகுமார், பேராசிரியர் டாக்டர் க.இளஞ்சேரலாதன் ஆகியோரைக் கொண்ட குழுவினர் பெண்ணின் இடது கை மற்றும் வலது காலின் தொடையில் உள்ள ரத்தநாளங்கள் வழியாக நவீன கருவியின் உதவி யுடன் பலூனைச் செலுத்தி கழுத்துப் பகுதியில் இருந்த ரத்தக்குழாயின் அடைப்பை சரிசெய்து விரிவடைய செய்தனர். அதன்பின் மேலும் அடைப்பு ஏற்படாமல் இருக்க, ரத்தக்குழாயில் ஸ்டென்ட் பொருத்தினர். இந்த சிகிச்சைக்கு பின்னர் பெண்ணின் தலை வலி, இடது கண், முகம், கையில் இருந்த வீக்கம் குறைந்தது. இப்போது அவருக்கு எளிதாக ரத்த சுத்திகரிப்பும் செய்ய முடிகிறது.

தனியாரில் ரூ.3 லட்சம்

இது தொடர்பாக மருத்துவ மனை டீன் பொன்னம்பல நமச் சிவாயம், ஆர்எம்ஓ ரமேஷ், ரத்த நாள அறுவைச் சிகிச்சைத் துறை தலைவர் க.துளசிகுமார், பேராசிரியர் க.இளஞ்சேரலாதன் ஆகியோர் நேற்று செய்தியாளர் களிடம் கூறும்போது, “இந்தியாவி லேயே முதல்முறையாக போலி யோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு கழுத்துப் பகுதியில் இருந்த ரத்தக்குழாய் அடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத் துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்ட இந்த அறுவைச் சிகிச்சையை, தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.3 லட்சத்துக்கு மேல் செலவாகும்” என்றனர்.

டாக்டர்கள் கோரிக்கை

இந்த அறுவைச் சிகிச்சை சி-ஆர்ம் என்ற கருவியின் உதவியுடன் செய்யப்பட்டது. இந்த கருவியில் கதிர்வீச்சு அதிகமாக இருக்கிறது. இதனால் அறுவைச் சிகிச்சை செய்யும் டாக்டர்களுக்கு புற்றுநோய் வருவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. இதுபோன்ற அறுவை சிகிச்சைகளைச் செய்வ தற்காக கதிர்வீச்சு குறைவான 10 நவீன கருவியை (காத்லேப்) தமிழக அரசு வாங்கியுள்ளது. இது போன்ற அறுவைச் சிகிச்சைகளை அதிகமாக செய்யும் அரசு ஸ்டான்லி மருத்துவமனை ரத்த நாள அறுவைச் சிகிச்சைக்கு காத்லேப் கருவியை அரசு வழங்கினால் நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். டாக்டர்களும் கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து விடுபடுவார்கள் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதய ரத்தக்குழாய் அடைப்பை நீக்கி ஸ்டென்ட் பொருத்தப்பட்டு குணமடைந்த மாற்றுத்திறனாளி பெண்ணிடம் நலம் விசாரிக்கிறார் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் பொன்னம்பல நமச்சிவாயம். உடன் ஆர்எம்ஓ ரமேஷ், பெண்ணின் தந்தை ரத்தினசபாபதி உள்ளிட்டோர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x