Published : 28 May 2015 08:27 AM
Last Updated : 28 May 2015 08:27 AM

பொதுமக்களிடையே வரவேற்பை பெற்ற அம்மா மருந்தகங்கள்: 15 சதவீதம் தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை

மருந்துகள்15 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படு வதால், அம்மா மருந்தகங்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

ஏழை, எளிய மக்களுக்கு நியாய மான விலையில் தரமான மருந்து களை விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி 2014-15-ம் ஆண்டு பட்ஜெட்டில், தமிழகத்தில் 100 அம்மா மருந் தகங்கள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித் தார். இதற்காக ரூ.20 கோடியை மாநில விலை நிலைப்படுத்தும் நிதியில் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட் டார். இதையடுத்து கூட்டுறவுத் துறையின் மூலம் அம்மா மருந் தகங்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றன. 2014-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி காஞ்சிபுரம், கடலூர், ஈரோடு, மதுரை, சேலம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 10 இடங்களில் தலா ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட 10 அம்மா மருந்தகங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அம்மா மருந்தகங்கள் ஒன்றன்பின் ஒன் றாக திறக்கப்பட்டன. இதன் மூலம் தமிழகத்தின் அம்மா மருந்தகங் களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்தன. இந்நிலையில் மேலும் ரூ.1.60 கோடி செலவில் அமைக்கப்பட்ட அம்மா மருந்தகங் களை கடந்த 25-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். பட்ஜெட்டில் அறிவித்தபடி தற்போது தமிழகத்தில் 100 அம்மா மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தனியார் மருந்தகங்களை விட, அம்மா மருந்தகங்களில் அனைத்து மருந்துகளும் 15 சதவீதம் தள்ளு படி விலையில் விற்பனை செய்யப் படுகின்றன. முதியவர்கள் மற்றும் படுத்தபடுக்கையாக இருக்கும் நோயாளிகளுக்கு வீடு தேடி சென் றும் மருந்துகள் விநியோகம் செய்யப்படுகின்றன. தனியாரின் நவீன மருந்தகங்களில் உள்ள அனைத்து வசதிகளும் அம்மா மருந்தகங்களில் உள்ளன. அனைத்து அம்மா மருந்தகங்களி லும் குளிர்சாதன வசதி செய்யப் பட்டுள்ளது. முக்கியமான மருந் துகளை வைப்பதற்காக பிரிட்ஜ் வைக்கப்பட்டுள்ளது. மருந்தகங் களுக்கு வரும் பொதுமக்களிடம் ஊழியர்கள் கனிவாக நடந்துகொள் கின்றனர். இதனால் அம்மா மருந்தகங்களுக்கு பொதுமக்களி டையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சென்னை நங்கநல்லூர் அம்மா மருந்தகத்தில் பணிபுரியும் சிவசங் கர் கூறும்போது, “டாக்டர் சீட்டு இருந்தால்தான் மருந்துகளை கொடுக்கிறோம். மருந்து வாங் கிச் செல்பவர்களின் செல்போன் அல்லது தொலைபேசி எண்களை ஊழியர்கள் வாங்கி வைத்துக்கொள் வார்கள். தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் மருந்து வாங்க மறந்துவிட்டால் கூட, அவர்களை ஊழியர்கள் தொடர்பு கொண்டு நினைவுபடுத்துவார்கள். மருந்தகத்துக்கு வர முடியாத வர்களுக்கு, ஊழியர்களே அவர் களின் வீட்டுக்கு சென்று மருந்து களை வழங்கு கின்றனர்” என்றார்.

மேலும் 210 மருந்தகங்கள்

கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கூட்டுறவுத் துறை யால் ஏற்கெனவே 210 மருந்தகங் கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுக்கும் அம்மா மருந்தகங்கள் என்று பெயர் மாற்றப்பட உள்ளது. 2014-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி முதல் கடந்த 16-ம் தேதி வரை 84 அம்மா மருந்தகங்கள் மூலம் ரூ.12 கோடியே 3 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன” என்றார்.

மக்கள் கருத்து

புழுதிவாக்கம் - லோகநாதன் (69):

அம்மா மருந்தகத்தால் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறுகின்றனர். 15 சதவீதம் தள்ளு படி கிடைப்பதால் தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொள்பவர் கள் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் சேமிக்கலாம். இதுபோல இன்னும் நிறைய இடங்களில் அம்மா மருந்தகங்களை திறக்க வேண்டும்.

அம்மா மருந்தகத்தில் வாடிக் கையாளர்களை மரியாதையாக நடத்துகின்றனர். பொதுமக்கள் பயன்பெறும் திட்டங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.

ஆதம்பாக்கம் - விஜயலட்சுமி (49):

ஏதாவது மருந்து இல்லை என்றாலும், ஓரிரு நாட்களில் அந்த மருந்தை வாங்கித் தருகின்றனர். பொதுமக்களின் தொலைபேசி எண்களை வாங்கி வைத்துக் கொண்டு ஊழியர்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x